காஷ்மீரிலிருந்து பிரிட்டனுக்கு பேருந்து: புதிய போக்குவரத்து திட்டம்
பிரிட்டனில் வசிக்கும் காஷ்மீர் மக்களின் நலன் கருதி இருநாடுகளும் பேருந்து போக்குவரத்தை தொடங்க திட்டமிட்டுள்ளது.
பிரிட்டனில் உள்ள பர்மிங்ஹாம் நகரில் இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர்.
அவர்களுக்கு வசதியாக காஷ்மீரிலுள்ள மிர்பூர், பிரிட்டனிலுள்ள பர்மிங்ஹாம் நகருக்கு இடையில் இந்த புதிய பேருந்து சேவையை தொடங்க திட்டமிட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
பாகிஸ்தான், ஈரான் உள்ளிட்ட 7 நாடுகள் வழியாக இந்த இந்த சாலை வழித்தடம் செல்கிறது.
6,500 கிமீ நீளம் கொண்ட இந்த வழித்தடத்தில் மிர்பூரிலிருந்து, பர்மிங்ஹாம் நகரை சென்றடைய 12 நாட்களாகும்.
இதற்கிடையில் தாலிபன் தீவிரவாதிகள் ஆதிக்கம் நிறைந்த ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டி உள்ள பாகிஸ்தான் நகரமான குவெட்டா வழியாகவும் இந்த பேருந்து செல்லும் என்பதால், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் இருக்கும் என்று கருதப்படுகிறது.
இந்த பேருந்தில் பயணி ஒருவர் செல்வதற்கு கட்டணமாக 130 பவுண்டுகள் கட்டணமாக நிர்ணயிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லியிலிருந்து பர்மிங்ஹாம் நகருக்கு விமானத்தில் செல்ல குறைந்தபட்சம் 460 பவுண்டு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்நிலையில், காஷ்மீரிலிருந்து பிரிட்டனுக்கு தரை வழியாக பேருந்தில் செல்லும்போது நான்கில் ஒரு பங்கு கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படும் என்பதால் வரவேற்பு இருக்கும் என்று கருதப்படுகிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!