Thursday, October 4, 2012

14 வயதில் பல்கலைக்கழகத்தில் BA படிக்கும் ஜிம்பாப்வே சிறுமி

14 வயதில் பல்கலைக்கழகத்தில் BA படிக்கும் ஜிம்பாப்வே சிறுமி




ஆப்ரிக்கா நாடான ஜிம்பாப்வேயில் சிறுமி ஒருவர் அந்நாட்டு பல்கலைக்கழகத்தில் சேர்ந்து BA படிப்பது ஆச்சர்யமூட்டுகிறது.
மௌட் சிஃபாம்பா என்ற பெயருடைய இந்த சிறுமி, தனது பெற்றோர்களை இளம் வயதிலேயே இழந்தவர்.

இருப்பினும் தனது கடின உழைப்பால் 14 வயதில் பல்கலைக் கழகத்தில் வணிகக் கல்வி படிக்கத் தேர்வாகி சாதனை படைத்துள்ளார்.

ஜிம்பாப்வே நாட்டில் மட்டுமல்லாது முழுத் தென்னாபிரிக்காவிலும் மிகக் குறைந்த வயதில் பல்கலைக் கழகம் ஒன்றில் கல்வி கற்கும் மாணவி மௌட் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

இவர் எதிர்காலத்தில் ஒரு கணக்காளராக வருவதே தனது இலட்சியம் என்று தெரிவித்துள்ளார்.

4 வருட பல்கலைக் கழக படிப்பு காலப் பகுதியில் வணிகம் மற்றும் கணக்கியலில் (Bachelor of Accountancy) பட்டம் பெற இவருக்குத் தேவையான உதவித் தொகை ஒவ்வொரு வருடமும் $10 000 டொலர்கள் வழங்கப்பட்டு வருகின்றது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!