Wednesday, October 3, 2012

உலகத் தரம் வாய்ந்த பல்கலைகழங்களின் பட்டியலில் கனடிய பல்கலைகழகங்கள்

உலகத் தரம் வாய்ந்த பல்கலைகழங்களின் பட்டியலில் கனடிய பல்கலைகழகங்கள்



உலகத் தரம் வாய்ந்த முதல் 20 பல்கலைகழகங்களின் பட்டியலில் கனடாவின் மெக்கில் பல்கலைகழகமும், டொரண்டோ பல்கலைகழகமும் இடம்பெற்றது.
2012ஆம் ஆண்டுக்கான குவாகுவாரெலி சீமேண்ஸ் பல்கலைக்கழகம்(QS World University) பல்கலைகழகங்களின் தரப்பட்டியலை வெளியிட்டது.

இதில் முதல் 200 பல்கலைக்கழகங்களின் வரிசையில் கனடாவின் ஒன்பது பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன. பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகம் 45ஆவது இடத்தையும், ஆல்பர்ட்டா பல்கலைக்கழகம் 108ஆவது இடத்தையும், மொன்றியல் பல்கலைக்கழகம் 114ஆவது இடத்தையும் பெற்றுள்ளன.

இந்த பட்டியலில் அமெரிக்காவின் மஸாச்சூசெட்ஸ் தொழில்நுட்ப கல்லூரி முதலிடத்தைப் பெற்றது.

கடந்த 2004ஆம் ஆண்டு முதல் நடந்து வரும் தரக்கணிப்பில் முதலிடம் பெற்று வந்த ஹார்வார்ட் பல்கலைக்கழகமும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகமும் அந்தத் தகுதியை இந்த முறை இழந்துவிட்டன.

70000 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தி அதன் அடிப்படையிலும் முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!