Wednesday, October 3, 2012

பிரான்சில் விற்கப்படும் மருந்துகளில் பாதி உயிருக்கு ஆபத்தானவை

பிரான்சில் விற்கப்படும் மருந்துகளில் பாதி உயிருக்கு ஆபத்தானவை: புதிய தகவலால் பரபரப்பு




பிரான்சில் விற்கப்படும் மருந்துகளில் பாதி பயனற்றவை, குறிப்பாக 5 சதவிகிதம் உயிருக்கே ஆபத்தானவை என்று புத்தகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிசில் உள்ள நெக்கெர் மருத்துவமனையின் முன்னாள் தலைவரான பிலிப் எவன் என்பவரும், மருத்துவரும் எதிர்க்கட்சியான UMP கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான பெர்னார்ட் டெப்ரே என்பவரும் ஆராய்ச்சி செய்து நூல் ஒன்றை வெளியிட்டனர்.

இது குறித்து எவன் அளித்த பேட்டியில், நானும் டெப்ரேயும் இணைந்து “மீடியேட்டர்” ஊழலை அம்பலப்படுத்த போவதாக தெரிவித்தார். இந்த மீடியேட்டர் என்ற மருந்தை சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்த மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். இதனால் நூற்றுக்கணக்கானோர் நோய் குணமாகாமல் மரணத்தைத் தழுவினர்.

“4000, useful, useless and dangerous medicines” என்ற நூலில் பயனற்ற அல்லது ஆபத்து நிறைந்த மருந்துகளுக்கு செலவழிக்கும் தொகையை மிச்சப்படுத்தினால் அது ஆண்டொன்றுக்கு பத்து மில்லியன் யூரோவை எட்டும் என்பது விளக்கப்பட்டுள்ளது.

உலகளவில் அமெரிக்கா, சீனா, ஜேர்மனி, அயர்லாந்துக்கு அடுத்தபடியாக பிரான்ஸ் நாடு அதிக அளவில் மருந்துகளைப் பயன்படுத்துகிறது.

ஒவ்வொரு பிரெஞ்சு நபரும் சராசரியாக ஆண்டொன்றுக்கு 47 மருந்துப் பொட்டலங்களை வாங்குகின்றனர். ஒரு மனிதருக்கு 532 யூரோ செலவாவதால் மொத்த உள்நாட்டு உற்பத்தி 12 சதவீதம் என்ற அளவில் உள்ளது. இந்த மருந்துகளுக்கான உற்பத்திச் செலவில் 77 சதவீதத்தை அரசே ஏற்றுக் கொள்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!