Wednesday, October 3, 2012

கின்னஸ் சாதனை படைத்த 7.4 அடி உயரமுள்ள நாய்

கின்னஸ் சாதனை படைத்த 7.4 அடி உயரமுள்ள நாய்






உலகின் சிறந்த சாதனை தொகுப்புகளை வெளியிடும் கின்னஸ் புத்தகத்தின் 2013ம் ஆண்டிற்கான பதிப்பு தற்போது வெளியாகி உள்ளது.
இதில் அமெரிக்காவின் மிச்சிகன் நகரைச் சேர்ந்த கிரேட் டேன் என்ற நாய் உலகின் மிக உயரமான நாயாக தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நாய் நின்ற நிலையில், பாதம் முதல் தோள் வரை உயரம் 3.4 அடி. பின்னங்காலை வைத்து நிமிர்ந்து நின்றால், உயரம் 7.4 அடி ஆகும். தினமும், 14 கிலோ உணவை உண்ணும் டேனின் எடை 70.3 கிலோ. இதன் வயது மூன்று.

கிரேட் டேனின் உயரத்தை விட ஒரே ஒரு அங்குலம் குறைவான கிரேட் ஜார்ஜ் என்ற நாய் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.

கிரேட் டேனின் உரிமையாளர் டெனிஸ், பெருமையுடன் கூறுகையில், டேனினை பார்ப்பவர்கள் பெரும்பாலும் கேட்கும் கேள்வி, இது நாயா? அல்லது குதிரையா? என்பது தான் என்றும் இதை, வேன் மூலம்தான் வெளியே கூட்டிச் செல்ல முடியும் எனவும் கூறியுள்ளார்.

அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று வயதான ஜாக்ஸ்டாக், 1.55 மீற்றர் உயரத்துடன் உலகின் உயரமான கழுதையாக தெரிவாகி உள்ளது.










No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!