Tuesday, October 2, 2012

அமெரிக்காவில் காந்தி சிலையை திறந்து வைக்கிறார் கலாம்

அமெரிக்காவில் காந்தி சிலையை திறந்து வைக்கிறார் கலாம்




அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் மகாத்மா காந்தி சிலையை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று திறந்து வைக்கிறார்.
இன்று தேசத்தந்தை மகாத்மா காந்தியின் பிறந்த தினத்தை உலகம் முழுவதும் உள்ள காந்தியவாதிகள் கொண்டாடுகின்றனர்.

இந்நிலையில் புளோரிடா மாகாணத்தின் டேவி நகரில் பால்கம் லியா பார்க் என்ற இடத்தில், கேரள சமாஜத்தின் சார்பில் ஏழு அடி உயரமுள்ள மகாத்மா காந்தியின் வெண்கலச் சிலை நிறு வப்பட்டு உள்ளது.

இந்நிலையில் அமெரிக்கா சென்றுள்ள முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இன்று இந்த சிலையைத் திறந்து வைக்கிறார்.

இவ்விழாவில் புளோரிடா மேயர் ஜுடி பால் பங்கேற்கிறார்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!