இஸ்லாத்தின் இருதயத்தில் தவறு இருக்கிறதாம்: பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி
இஸ்லாத்தின் இருதயத்தில் ஏதோ தவறு நடந்துகொண்டு இருக்கிறது என்று பிரிட்டனில் வாழும் இந்திய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய Innocence of muslims திரைப்படத்திற்கு பின்பு இவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் என்பது கவனிக்கத்தக்கது.
தாம் சிறுவனாக இருந்தபோது, முஸ்லிம் நாடுகளின் அநேக நகரங்கள் பரந்த கலாசாரத்தின் மையமாக திகழ்ந்ததாகவும் ஆனால் ஒரு கட்டத்தில் இந்த கலாசாரம் திசைமாறி சென்றுவிட்டதாகவும் குறிப்பிட்டார்.
தனக்குதானே ஏற்படுத்திக் கொண்ட காயத்தைப் போல், இஸ்லாத்தில் நடந்த இதை ஒரு மிகப்பெரிய விபத்தாக கருதுகிறேன் என்றார்.
நபிகள் நாயகத்திற்கு எதிராக சாத்தானின் வேதங்கள் என்ற நாவலை எழுதியதற்காக இஸ்லாமிய நாடுகளின் பார்வையிலிருந்து மறைவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார் ருஷ்டி.
கடந்த மாதங்களில் ராஜஸ்தானில் நடைபெற்ற இலக்கிய மாநாட்டிற்கு ருஷ்டிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தாலும் இந்தியாவில் இஸ்லாமிய அமைப்புகளின் எதிர்ப்பு மற்றும் கொலை மிரட்டல் காரணமாக தனது பயணத்தை தவிர்த்தார் ருஷ்டி.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!