305 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது.???
ஸ்கொட்லாந்து சுதந்திரம் பற்றி 2014ஆம் ஆண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்துவது தொடர்பாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோனும் ஸ்கொட்லாந்து முதலமைச்சர் அலெக்ஸ் கமென்டும் ஓர் ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளனர். இதன் பிரகாரம் 305 ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்கொட்லாந்து சுதந்திர நாடாக பிரகடனப்படுத்தப்படவுள்ளது. ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பாக நடக்கவுள்ள கருத்துக்கணிப்புக்கான நிபந்தனைகளை முறையாக ஏற்றுக்கொண்டதன் மூலம் பல மாதங்களாக நடந்த கருத்தாடலுக்கு இவர்கள் முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். இந்த கருத்துக்கணிப்பு 1707ஆம் ஆண்டில் யூனியன் சட்டம் மூலம் இணைக்கப்பட்ட ஸ்கொட்லாந்தின் பிரிவுக்கு வழிவகுக்கக்கூடும்.
2014 இலையுதிர் காலத்தில் வாக்கெடுப்பை நடத்தும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட முன்னரும் பின்னரும் எடின்பரோவின் இந்த இருவரும் கைகுழுக்கிக்கொள்வர். இந்த வாக்கெடுப்பு ஸ்கொட்லாந்தின் சுதந்திரம் தொடர்பாக ஆம் இல்லை என்ற ஒரு தெரிவை மட்டுமே வழங்கும். கமெருன் விரும்பாத போதிலும் 16 வயது இளைஞர்களும் இந்த வாக்கெடுப்பில் கலந்துகொள்வர். இந்த ஒப்பந்தம், 5 மில்லியன் ஸ்கொட்லாந்து மக்களிடையே கருத்துக் கணிப்பை நடத்தும் அதிகாரத்தை ஸ்கொட்லாந்து அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளது. எட்வர்ட் ஐஐ மன்னரின் படைகளை ஸ்கொட்லாந்து இராணுவம் துவம்ஸம் செய்தபோது பனொக்பேண் யுத்தத்தின் 700 ஆண்டுகள் பூர்த்தியாவதால் 2014ஆம் ஆண்டு சிறப்புபெறுகிறது.
இப்போது நாம் செயன்முறைப் பற்றி கவனித்துவிட்டோம். ஐக்கிய இராச்சியத்துடன் இருப்பதால் ஸ்கொட்லாந்தும் ஸ்கொட்லாந்துடன் இருப்பதால் ஐக்கிய இராச்சியமும் நன்மையடையும் என கமரொன் கூறினார். ஐக்கிய இராச்சியத்தை பேணவே, மக்கள் வாக்களிப்பர் என நம்புகிறேன் என அவர் மேலம் குறிப்பிட்டார். ஐக்கிய இராச்சியம் (ஊனிடெட் Kஇங்டொம், பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ ஊK அல்லது பிரித்தானியா (Bரிடைன்) என்றோ (தவறுதலாக) பெரிய பிரித்தானியா என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பெரிய பிரித்தானியத் தீவில் உள்ளன.
நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ. இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது. பல ஒன்றிணைப்புச் சட்டங்களின் வாயிலாக, (வேல்ஸை உள்ளடக்கிய) இங்கிலாந்து இராச்சியத்தோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, இலண்டன் மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ. இ. உருவாக்கப்பட்டது. 1922இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக உருவானது (எனினும் 1949 வரை, ஐக்கிய இராச்சியத்தின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய இராச்சியத்துடனே தொடர்ந்தன.
ஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, வடக்குக் கடல், ஆங்கிலக் கால்வாய், செல்டிக் கடல், ஐரியக் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது. பெரிய பிரித்தானியா » அல்லது பிரித்தானியா என்பது பிரித்தானியத் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் புவியியல் பெயராகும். அரசியல் ரீதியில், பெரிய பிரித்தானியா என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும். (அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகள்).பெரிய பிரித்தானியாவின் ஐக்கிய இராச்சிய ஒன்றிய சட்டம் 1707 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை வடக்குப் பிரித்தானியா என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை தெற்குப் பிரித்தானியா என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது.
ஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இன்றைய வழக்கில் பிரித்தானியா என்னும் பெயர் சுருக்கமாக மொத்த ஐக்கிய இராச்சியத்தை குறிப்பதற்காக பயன்படுத்தப்படுகிறது. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய இராச்சியம் என்பதற்கு பெரிய பிரித்தானியா என்று குறிப்பிடுவது பிழையாகும், ஏனென்றால் இந்த பெயர் வடக்கு அயர்லாந்தை உட்படுத்தாது. இது மனவருத்ததை ஏற்படுத்தலாம். பிரித்தானியத் தீவுகள் என்பது பெரிய பிரித்தானியத் தீவு மற்றும் அயர்லாந்து தீவு மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான கால்வாய் தீவுகள், ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, மான் தீவு, ஈச்லெ ஒf Wஇக்க்ட், ஷெட்லாந்து தீவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது.
எனினும், பிரித்தானியாவுக்குச் (அதாவது ஐக்கிய இராச்சியத்திற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக அயர்லாந்தில். இதற்கு மாற்றுப் பெயராக, அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், வடக்கு அட்லாந்தியத் தீவுகள் என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!