Monday, October 15, 2012

2012 கால்பந்தாட்ட போட்டியின் அசத்தலான சின்னம்

2012 கால்பந்தாட்ட போட்டியின் அசத்தலான சின்னம்





வரும் 2014ம் ஆண்டு உலகக்கோப்பை கால்பந்து போட்டி, பிரேசில் நாட்டில் நடக்கிறது. இதற்காக அரிதான, மிகவும் பொருத்தமான ஒரு அதிகார  பூர்வ சின்னத்தை தேர்ந்தெடுத்து இருக்கிறது அந்த நாடு. அது ஒருவகை எறும்புத்தின்னி. ‘பிரேசிலியன் த்ரீ பேண்டட் ஆர்ம டில்லோ’ என்று இதற்குப் பெயர். பெயருக்கு ஏற்றபடி இது பிரேசில் நாட்டில் மட்டுமே வசிக்கிறது. அழிந்துவரும் அரிதான இனம். இதன் உடல் அமைப்பு விநோதமானது. தலை ஒரு பகுதியாகவும், வயிற்றுப் பிரதேசத்தில் ‘வெஸ்டிபுள் டியூப்’ போல மூன்று விசித்திரமான மடிப்புகளுடன் உடல் ஒரு பகுதியாகவும் இருக்கிறது.

குட்டியூண்டு வால் பின்னால் நீட்டிக் கொண்டிருக்கும். இதன் உடலின் மேல்பகுதி, ஆமைகளுக்கு இருப்பதைப் போன்ற கடினமான ஓடுகளுடன் இருக்கிறது. ஆனால், வயிறு போன்ற அடிப்பாகங்கள் மென்மையானவை. எதிரிகளால் ஆபத்து வரும்போது, இது தனது தலையை வளைத்துக்கொண்டு, உடலை அந்த மடிப்புகள் இருக்கும் இடத்தில் அழகாக மடக்கி, ஒரு பந்து போல சுருண்டு கொள்கிறது. உருட்டிப் பார்க்கும் எந்த விலங்கும், இதை கடினமான ஒரு கல் எனக் கருதி விட்டுவிட்டுப் போய்விடும்.

ஆபத்து நீங்கியதும் பழையமாதிரி எழுந்து நடக்கும். பொதுவாக எறும்புத்தின்னிகள் தரையில் வளை தோண்டியோ, மரப்பொந்துகளிலோ வசிக்கும் பழக்கம் உள்ளவை. ஆனால், இப்படி ஒரு அமர்த்தலான பாதுகாப்பு இருப்பதால், இவை மட்டும் கேஷுவலாக புல்வெளிகளில் வசிக்கின்றன. கிட்டத்தட்ட கால்பந்து போலவே இதன் உருண்ட வடிவம் இருப்பதால், கால்பந்துப் போட்டிகளின் சின்னமாகி விட்டது. அதோடு இவை அழிந்து வருவது பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வும், இந்த அறிவிப்பைச் செய் திருக்கிறது பிரேசில்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!