Thursday, October 18, 2012

கடற்கரைக்கு வெகு அருகே வந்த மீன்கள்

கடற்கரைக்கு வெகு அருகே வந்த மீன்கள்





இலங்கையில் மட்டக்களப்பு காத்தான்குடி கடலில் இன்று புதன் கிழமை வழமைக்கு மாறாக அதிக எண்ணிக்கையிலான மீன்கள் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வந்ததால் பொது மக்கள் சர்வ சாதாரணமாக மீன்பிடித்ததை அங்கு காணக் கூடியதாக இருந்தது.

சூடை,கீரி ,சூரன் ,கணவாய் உட்பட பல்வேறு வகையான மீன் இனங்கள் காலை தொடக்கம் மாலை வரை அதிக எண்ணிக்கையில் கூட்டம் கூட்டமாக கரையை நோக்கி வந்ததாக மாவட்ட மீன் பிடித்துறை இயக்குனர் எஸ்.ரி.ஜோர்ஜ் கூறுகின்றார்.

பெரும் எண்ணிக்கையிலான மக்கள் அங்கு விரைந்து மீன்களை பிடித்து சென்றதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

குறித்த மீன் இனங்கள் கடலில் குளிரான பிரதேசத்தில் நடமாடுவதாகக் கூறும் கிழக்கு பல்கலைக்கழக விலங்கியல் துறை தலைவர் கலாநிதி பி.வினோபாவா சில சமயம் கரையோரத்தில் வெப்ப நிலை குறைந்த நீரோட்டங்கள் வருவதால் இது போன்றதொரு நிலைமை ஏற்படுகிறது. இது காலநிலை மாற்றத்தின் ஊடாக நிகழும் மாற்றங்களாகும் என்று தெரிவித்த அவர் இந்த மாற்றங்களை அறிநது கொள்ள அவுஸ்திரேலியாவில் இருப்பது போன்ற சமுத்திரவியல் ஆய்வு மையமொனறு நாட்டில் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டினார்;

இந்த மீன்களை உண்பதால் பொது மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புகள் இல்லை என்றும் கிழக்கு பல்கலைக்கழத்தின் விலங்கியல் துறை தலைவர் கலாநிதி .பி. வினோபாவா மேலும் கூறுகின்றார்

2 comments:

  1. இயற்கையுடன் விளையாடுகிறோம்...

    ReplyDelete
    Replies
    1. அவை "நிலம்" ய் முன் அறிவிக்க வந்திருக்கின்றன ... பாவம் எதை கண்டாலும் விடாத மனித குளம் இதை மட்டும் என்ன விட்ட விட்டது ... கடைசியில் ஜெய்த்தது "இயற்கை"

      Delete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!