நிலவில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்: ஆய்வில் தகவல்
நிலவில் நீர் இருப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தற்போதைய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
நிலவில் உள்ள துருவ எரிமலைகளின் உள்புறத்தில் பனிக்கட்டிகள் இருப்பதற்கான வாய்ப்பை மிச்சிகன் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தங்களது ஆய்வில் உறுதி செய்துள்ளனர்.
சூரியக் காற்றில் உள்ள அபரிமிதமான ஹைட்ரஜன் அணுக்கள், ஆக்சிஜனுடன் இணைந்து நிலவின் மேற்பரப்பில் ஹைட்ராக்ஸல் எனப்படும் சேர்மமாக உருவாகியுள்ளது. இதனை புவி அறிவியல் துறை பேராசிரியர் யூக்ஸ்யு ஸங்க் தன் ஆய்வில் தெரிவித்துள்ளார்.
இந்த ஹைட்ராக்ஸல் சேர்மம், நிலவில் உள்ளவற்றில் பரவியுள்ளது. நேரடியாகக் குடிப்பதற்கான நீராக இல்லாவிட்டாலும், எதிர்காலத்தில் நிலவில் எளிதாக நீர் கிடைக்க இது உதவியாக இருக்கும் என்று யூக்ஸ்யு ஸங்க் தன் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மற்றொரு பேராசிரியரான யாங்க் லியு, நிலவில் உள்ள சூழல் வேறுமாதிரியாக உள்ளது. ஆனால், அங்குள்ளவற்றில் நீரை உற்பத்தி செய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
நிலவில் இருந்து அப்போலோ விண்கலத்தால் கொண்டு வரப்பட்ட மாதிரிகளை 5 ஆண்டுகளாக ஆய்வு செய்து இம்முடிவு வெளியிடப்பட்டுள்ளது. இயற்கை புவி அறிவியல் என்ற இதழில் இந்த ஆய்வுக்கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!