29 வயதிலேயே முதுமையை நினைத்து கவலைப்படும் பெண்கள்
முதுமை அடைவதை நினைத்து பெண்கள் 29 வயதிலிருந்தே கவலைப்பட தொடங்குகின்றனர் என்பது புதிய ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளது.
சரும பராமரிப்பு லோஷன் தயாரிக்கும் லண்டன் நிறுவனமொன்று மனதளவிலும், உடலளவிலும் முதுமையை எப்படி எதிர்கொள்கின்றனர் என்பது குறித்து 2 ஆயிரம் பெண்களிடம் கருத்துக்கணிப்பும், ஆய்வும் நடத்தியது.
இதில், பெரும்பாலான பெண்கள் பதின்வயதில் அதாவது 20 வயது வரை முதுமை குறித்த சிந்தனை இல்லாமல் மகிழ்ச்சியாகவே உள்ளனர். 29 வயதிற்கு பிறகு தங்களது தோற்றத்திற்கு பாதிப்பு ஏற்படுமோ என்ற கவலை மற்றும் சிந்தனை அதிகரிப்பது தெரியவந்துள்ளது.
இவ்வாறு கவலைப்பட்டால் மனம் மற்றும் உடல்நிலை பாதிப்படையும். முதுமை முன்கூட்டியே தாக்கும். இது ஆரோக்கியத்தை பாதித்து பல நோய்களை உண்டாக்கும்.
எனவே ஊட்டச்சத்துள்ள உணவுகள், தொடர் தியானம் மற்றும் உடற்பயிற்சி, நடைபயிற்சியுடன் அவ்வப்போது மருத்துவ பரிசோதனையும் செய்து கொண்டால் முதுமை கவலை, மன உளைச்சல் இல்லாமல் ஆரோக்கிய வாழ்வு வாழலாம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!