Wednesday, October 17, 2012

பூசணிக்காய் போட்டி: 768.5 கிலோ எடையுள்ள பூசணிக்காயை விளைவித்தவருக்கு பரிசு

பூசணிக்காய் போட்டி: 768.5 கிலோ எடையுள்ள பூசணிக்காயை விளைவித்தவருக்கு பரிசு






சூரிச் மாநிலத்தின் நெஃப்ட்டென்பெக்கைச் சேர்ந்த பேனி மேயர் என்ற தோட்டக்காரர் சுவிட்சர்லாந்திலேயே மிகப்பெரிய பூசணிக்காயை விளைவித்திருக்கிறார். இம்மாநிலத்தில் ஸீக்ராபேனில் நடக்கும் பூசணிக்காய்ப் போட்டிக்கு இவர் இந்த ஆண்டும் பெரிய பூசணிக்காயை (768.5 கிலோ) கொண்டு வந்திருந்தார்.

பேனி மேயர் கடந்த வருடமும் பூசணிக்காய் போட்டியில் கலந்து கொண்டார். அது 702 கிலோ எடையிருந்தது.

இந்த ஆண்டு, ஃபிரான்சில் உள்ள மேரி டாஓ என்பவர் 730 கிலோ எடையுள்ள பூசணிக்காயை விளைவித்திருக்கிறார்.

இந்தக் காய் தான் இன்று வரை ஐரோப்பாவின் மிகப்பெரிய காய் என்ற பெயர் பெற்றிருந்தது. ஆனால் இப்போது மேயர் கொண்டு வந்த காயோ இதை விட எடை கூடியதாகும்.

எனவே இவரை ஐரோப்பாவின் சாதனையாளர் என்று தோட்டக்காய்களுக்கான சந்தை மையத்தின் நிர்வாகியான ஃஜக்கர் ஃபார்மர் அறிவித்துவிட்டார்.

மேயருக்கு சிறியகார் எடையுள்ள இந்தப் பெரிய பூசணியை விளைவித்ததற்காக 2500 யூரோ (3000 ஃபிராங்க் / 3200 டொலர்) ரொக்கப் பரிசாகக் கிடைக்கும்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!