பீஜிங்கில் உருவாகும் உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம்
அமெரிக்காவில் உள்ள அட்லாண்டா விமான நிலையம் தான் தற்போது உலகிலேயே மிக பெரியதாக உள்ளது.
இங்கு ஆண்டுக்கு 8 கோடியே 90 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர். அதற்கு அடுத்தபடியாக பீஜிங் மற்றும் லண்டன் ஹுத்ரு விமான நிலையங்கள் திகழ்கின்றன.
சீன தலைநகர் பீஜிங்கில் சர்வதேச விமான நிலையத்தில் ஆண்டுக்கு 7 கோடியே 50 லட்சம் பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்நிலையில், இங்கு புறநகரில் மற்றொரு விமான நிலையம் கட்டப்பட உள்ளது. இது 55 சதுர கிலோ மீற்றர் பரப்பளவு உடையதாக இருக்கும்.
இங்கு ஆண்டொன்றுக்கு 13 கோடி பேர் வந்து செல்ல முடியும். இதற்கு “பீஜிங் டாசிங் சர்வதேச விமான நிலையம்” என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையத்தின் கட்டுமான திட்டத்தை நெதர்லாந்து விமான நிலைய ஆலோசனை நிலையமான ‘நாகோ’ தயாரித்துள்ளது.
இந்த விமான நிலையம் பயன்பாட்டுக்கு வரும் போது, உலகிலேயே மிகப்பெரிய விமான நிலையம் என்ற அந்தஸ்தை பெறும். இதை வருகிற 2017ம் ஆண்டில் திறக்க சீனா திட்டமிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!