16 மில்லியன் யூரோ பணத்தில் அரண்மனை கட்டுகிறார் தென் ஆப்ரிக்க ஜனாதிபதி
தென் ஆப்ரிக்கா நாட்டின் ஜனாதிபதியாக ஜேக்கப்ஷுமா பதவி வகித்து வருகிறார்.64 வயதான இவருக்கு 4 மனைவிகள் உள்ளனர். இவர் குவாசுலு நடால் மாகாணத்தில் உள்ள காண்ட்லா என்ற கிராமத்தில் தனக்கு சொந்தமாக பிரமாண்டமான அரண்மனை கட்டி வருகிறார்.
இதில், அவருக்கும், அவரது மனைவிகள் மற்றும் குழந்தைகளுக்கும் தனித்தனி அறைகள், அலங்கார சொகுசு பாத்ரூம்கள் உள்ளன. மேலும், அவரது பாதுகாவலர்களுக்கு 10 வீடுகளும் கட்டப்பட்டுள்ளன.
சுரங்க பாதைகளுடன் கூடிய தரை தளமும், ஹெலிகாப்டர் தளமும், மருத்துவமனையும் கூட உள்ளன. இந்த அரண்மனை சுமார் 16 மில்லியன் யூரோ (ரூ.127 கோடி) செலவில் கட்டப்படுகிறது. இது ஊழல் பணத்தில் கட்டப்படுவதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
வரி செலுத்தும் நிறுவனங்களுக்கு சலுகை காட்டி அவர்கள் தந்த லஞ்ச பணத்தின் மூலம் கட்டப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
அதை ஜனாதிபதி ஜேக்கப்பும் அவரது உதவியாளர்களும் மறுத்துள்ளனர். இந்த அரண்மனை ஜேக்கப்பின் குடும்ப உறுப்பினர்களால் கட்டப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!