Wednesday, October 24, 2012

உலகப் புகழ் பெற்ற சிகிரிய சிங்க பாதத்தின் ஒரு பகுதியில் பிளவு

உலகப் புகழ் பெற்ற சிகிரிய சிங்க பாதத்தின் ஒரு பகுதியில் பிளவு





இன்று மதியம் இலங்கையில் ஏற்பட்ட இடி, மின்னல் தாக்கத்தால் ஏற்பட்ட அதிர்வில் சிகிரிய சிங்க பாதத்தின் பகுதியொன்று உடைந்து பிளவுற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதி பழமை வாய்ந்ததும், இலங்கையின் சுற்றுலாத்தலமுமான சிகிரியாவில் அமைந்துள்ள  சிங்க பாதத்தின் ஒரு பகுதி இன்று நிலவிய கடும் இயற்கை காலநிலையால் பிளவுற்றதை அடுத்து சிங்கள மக்கள் மத்தியில் சிறு பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக அறிய முடிகின்றது.

கடந்த பல காலங்களில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையில்கூட ஏற்படாத இப் பிளவினால் தொடர்ந்து ஏதாவது அழிவுகள் நாட்டில் ஏற்பட்டுவிடுமோ என சிங்கள கிராமவாசிகள் மனதில் பதற்றம் தென்படுவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும், யாழில் பெய்து வரும் பருவகால மழையின் காரணமாக புல்லுக்குளத்தின் அணைக்கட்டும் இடிந்து விழுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புல்லுக்குளத்தின் அணைக்கட்டுக்கு அருகில் இருந்த மின்கம்பமும் குளத்தினுள் சரிந்து தொங்கிய வண்ணம் காணப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

அண்மையில் புல்லுக்குளம் ஆழப்படுத்தப்பட்டபோது அணைக்கட்டு அத்திவாரத்திற்கு கீழ் தோண்டப்பட்டமையால் மழை நீரால் சுமார் 50 அடி நீளமான அணை மண் அரிப்புக்கு உள்ளாகி குளத்தினுள் சரிந்து வீழ்ந்துள்ளது.



2 comments:

  1. தெரிந்துகொண்டோம்,,

    ReplyDelete
    Replies
    1. தொடர்ந்து இணைந்திருங்கள்

      Delete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!