400 ஆண்டு பழமையான 76 காரட் இந்திய வைரம் ஜெனீவாவில் நவம்பரில் ஏலம்
சுமார் 400 ஆண்டு பழமையான 76 காரட் எடை கொண்ட வைரம், ஜெனீவாவில் அடுத்த மாதம் ஏலம் விடப்படுகிறது. கிரிஸ்டி என்ற ஏல நிறுவனம் இதை ஏலத்தில் விடுகிறது. இதுகுறித்து அந்நிறுவன அதிகாரி ராகுல் ககாடியா கூறியதாவது: இந்தியாவில் முன்பு இருந்த கோல்கொண்டா சுரங்கத்திலிருந்து இந்த வைரம் எடுக்கப்பட்டது. குயிலின் முட்டை அளவு உள்ள இந்த வைரம் நிறம் எதுவும் இல்லாதது. கோஹினூர், ரீஜென்ட் போன்ற விலை உயர்ந்த புகழ் வாய்ந்த வைரங்களை போன்று இதுவும் இந்தியாவை சேர்ந்தது.
இது 1.5 கோடி டாலருக்கு ஏலம் போகும் என கணிக்கப்பட்டாலும், அதை விட அதிக விலைக்கு போகவும் வாய்ப்பு உள்ளது. 19ம் நூற்றாண்டு காலத்தில் ஹங்கேரி நாட்டின் இளவரசராக இருந்த ஆர்க்டியூக் ஜோசப் ஆகஸ்ட் என்பவரிடம் இந்த வைரம் இருந்தபோது அவரின் பெயரே இந்த வைரத்துக்கும் வைக்கப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!