Monday, February 11, 2013

அமெரிக்காவில் மனித முகமுள்ள விசித்திர நாய்: தத்தெடுத்துக்கிறீர்களா?

அமெரிக்காவில் மனித முகமுள்ள விசித்திர நாய்: தத்தெடுத்துக்கிறீர்களா?




அமெரிக்காவில் மனித முகமுள்ள 2 வயது நாய் தத்தெடுக்க தயாராக உள்ளது. அமெரிக்காவின் கென்டுக்கியில் உள்ள ஒரு இடத்தில் இருந்து மீட்கப்பட்ட 2 வயதான டோனிக் என்ற நாயை தத்துக் கொடுக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். பூடுல்/ஷி ஷு ஆகிய இரண்டு ஜாதி கலந்து பிறந்துள்ள டோனிக் பிற நாய்களை விட வித்தியாசமானது. அதன் முகத்தைப் பார்த்தால் மனித முகம் போன்றே உள்ளது. பார்த்தால் ஏதோ சீரியஸாக முகத்தை வைத்திருக்கும் டோனிக்கின் போட்டோ இணையதளத்தில் போட்டவுடன் அது பெரிய ஹிட்டாகிவிட்டது. டோனிக் தற்போது இன்டியானாவில் உள்ள ஹோம்வர்ட் பவுன்ட் விலங்குகள் நல குழுவின் பாதுகாப்பில் உள்ளது. இந்த நாயை தத்தெடுப்போர் தத்தெடுத்துச் சென்று வளர்க்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டோனிக் பிற நாய்களுடன் சகஜமாகப் பழகுகிறது. அதனால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!