Friday, February 15, 2013

சுபமுகூர்த்த நாள் ஆந்திராவில் 3 நாளில் 2 லட்சம் திருமணம்

சுபமுகூர்த்த நாள் ஆந்திராவில் 3 நாளில் 2 லட்சம் திருமணம்



ஆந்திராவில் சுப முகூர்த்த தினத்தை முன்னிட்டு கடந்த 3 நாளில் 2 லட்சம் திருமணங்கள் நடந்துள்ளன. தமிழகத்தில் ஆடி மாதத்தில் திருமணம் மற்றும் சுப நிகழ்ச்சிகள் செய்ய மாட்டார்கள். அதனால், அதற்கு முந்தைய ஆனி மாதத்தில் திருமணங்கள் அதிகமாக நடக்கும். அதேபோல, ஆந்திராவில் தெலுங்கு பஞ்சாங்கப்படி மகாமாசம் இன்றுடன் முடிகிறது.

மே மாதம் 2வது வாரம் வரை அடுத்து வரும் தெலுங்கு மாதங்கள் திருமணம் செய்ய ஏற்றது அல்ல என்பது ஆந்திர மக்களின் நம்பிக்கை. மகா மாசம் இன்றுடன் முடியும் நிலையில், கடந்த 3 நாட்கள் சுப முகூர்த்த தினங்கள் என்பதால் மாநிலம் முழுவதும் கடந்த 3 நாட்களில் 2 லட்சம் திருமணங்கள் நடந்துள்ளன. இதில் ஐதராபாத்தில் மட்டும் 50 ஆயிரம் திருமணங்கள் நடந்துள்ளன.

இதற்காக, திருமண மண்டபங்கள், விழா மண்டபங்கள் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்டன. பல இடங்களில் திருமண வீட்டார் மண்டபங்கள் கிடைக்காமல் திண்டாடினர். மண்டபங்களுக்கு கிராக்கி ஏற்பட்டதால் அதன் வாடகையும் உயர்ந்தது. செகந்திராபாத்திலும் நகரின் மற்ற இடங்களிலும் திருமண விழாக்களுக்கு மண்டபங்களில் ஒரு நாளுக்கு குறைந்தபட்சம் 3 லட்சம் வசூலிக்கப்பட்டது. மண்டபம் கிடைக்காமல் கோயில்களில் பல திருமணங்கள் நடந்ததால் பல கோயில்களில் மாலையும் கழுத்துமாக மணமக்களும் அவர்களது உறவினர்களும் திரண்டனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!