Tuesday, February 12, 2013

ஃபேஸ்புக் வேண்டாம்… மகளுடன் மல்லுக்கட்டும் தந்தை…


ஃபேஸ்புக் வேண்டாம்… மகளுடன் மல்லுக்கட்டும் தந்தை…


எப்பொழுது பார்த்தாலும் தமது ஃ'பேஸ்புக்'கிலேயே நேரத்தை செலவிடுவதைக் கண்ட அமெரிக்க தந்தை ஒருவர் அந்த கணக்கை முடித்து கொள்ள புதிய ஒப்பந்தம் ஒன்றை போட்டுள்ளார்.

அமெரிக்காவை சேர்ந்த 14 வயது பெண் பேஸ்புக்கை தொடர்ந்து உபயோகித்துள்ளதால் தன் பெற்றோருடன் பேசக்கூட நேரமில்லாமல் இருந்தது.

மகளின் செயலால் எரிச்சலடைந்த தந்தை பல முறை கெஞ்சியும் மிரட்டியும் கூறியுள்ளார். ஆனால் அவள் எதையும் கேட்டதாக தெரியவில்லை. இதையடுத்து இருவருக்குமிடையே ஒப்பந்தம் ஒன்று போடப்பட்டதன் படி தன் மகளிடம் பேஸ்புக்கை பயன்படுத்தாமல் இருக்க 11 ஆயிரம் ரூபாய் தருவதாக கூறியுள்ளார்.

இதை தொடர்ந்து அச்சிறுமியும் பேஸ்புக்கை இனி பயன்படுத்தப்போவதில்லை என்று தந்தையிடம் முறையாக ஒப்பந்தம் செய்துகொண்டார்.

அமெரிக்காவில் இது சரிப்பட்டு வரும் நம் ஊர் இளைய தலைமுறையினர் இந்த ஒப்பந்தத்திற்கு கட்டுப்படுவார்களா என்ன?

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!