ரஷ்யாவில் விழுந்து வெடித்து சிதறிய எரிநட்சத்திரம்- 400 பேர் படுகாயம்!
மாஸ்கோ: மிகப் பெரிய விண்கல் (asteroid) ஒன்று இன்று பூமியை கடக்க இருக்கும் நிலையில் ரஷ்யாவின் வான்வெளியில் எரி நட்சத்திரம் (meteorite) ஒன்று விழுந்தது. இதன் அதிர்வலைகளால் வீட்டு கண்ணாடிகள் உடைந்தும் மேற்கூரைகள் விழுந்தும் சுமார் 400க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து 1500 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஒன்று செல்யபின்ஸ்க் பகுதியில் இன்று மிகப் பெரிய எரிநட்சத்திரம் வெடித்து விழுந்தது. அப்போது நிலநடுக்கத்தைப் போல மிகப் பெரிய அதிர்வுகள் ஏற்பட்டிருக்கின்றன.
எரி நட்சத்திரத்திரம் வெடித்துச் சிதறியபோது மிகப்பெரிய வெடிச்சத்தத்தை கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். வெடித்துச் சிதறிய எரி நட்சத்திரத்தின் துகள்கள் நிலப்பரப்பில் எங்கும் விழவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்த அதிர்வால் ஒரு தொழிற்சாலையின் மேற்கூரை நொறுங்கியது. மேலும் அதிர்வில் வீடுகளின் கண்ணாடிகள் உடைந்து நொறுங்கின. இதில் சுமார் 400 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
Click Here to Watch
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!