இன்று காதலர் தினம் செல்போன் சலுகைகள் ரத்து
இன்று காதலர் தினம் கொண்டாடப்பட உள்ளது. காதலர் தினத்தை முன்னிட்டு வருவாய் பார்க்க பிஎஸ்என்எல் உள்ளிட்ட செல்போன் நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன. அதன்படி இன்று எஸ்எம்எஸ், அழைப்பு கட்டணச் சலுகை பெறுவதற்கான பூஸ்டர், ரேட்கட்டர் சேவையை பெற்றவர்கள், இலவச எஸ்எம்எஸ், அழைப்புகளுக்கான பூஸ்டர் சேவையை பெற்றிருப்பவர்கள் அந்தச் சலுகைகளை பயன்படுத்த முடியாது. இணைப்பு பெற்றபோது என்ன கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதோ அதே கட்டணம் ஒவ்வொரு அழைப்புக்கும், எஸ்எம்எஸ்க்கும் வசூலிக்கப்படும் என்று பிஎஸ்என்எல் மற்றும் தனியார் செல்போன் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தெரிவித்துள்ளன. ஒரு சில தனியார் நிறுவனங்கள் கடந்த ஆண்டு காதலர் தினத்திற்கு சலுகையை ரத்து செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!