விரட்டப்பட்ட அரேபியர்கள்: வெறிச்சோடி கிடக்கும் மாலி நாட்டின் கடைத் தெருக்கள்
மாலியின் டிம்புக்ட்டு நகரில் ஆரவாரமிக்க அங்காடித்தெரு இன்று ஆள் இல்லாமல் கிடக்கிறதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரெஞ்சு இராணுவம், வடக்கு மாலியை ஆக்கிரமித்திருந்த அல்கொய்தாவினரை அங்கிருந்து விரட்டியடித்ததும் அரேபியர்கள் நடத்தி வந்த கடைகள் அனைத்தும் மூடப்பட்டன, சில கடைகள் கொள்ளையடிக்கப்பட்டன.
நகரில் இருந்த அரேபியர் அல்ஜீரியாவுக்கும் மௌரிட்டேனியாவுக்கும் அகதிகளாகப் போய் விட்டனர்.
இந்நிலையில் கடந்த பத்து மாதங்களாக டிம்புக்ட்டு நகரும் அல்கொய்தா இயக்கத்தார் வசமே இருந்தது.
டிம்புக்ட்டு நகரில் வியாபாரிகளான அரேபியர் அந்நகரில் பெரிய பெரிய கடைகளை நடத்தி வந்தனர். பெரும் வியாபாரிகளாக இருந்த இவர்களின் கடைகளையும் சிலருடைய பெரிய வீடுகளையும் இன்று கொள்ளையடிக்கப்பட்டு விட்டது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!