நள்ளிரவில் கடந்து சென்ற விண்கல் பூமிக்கு ஆபத்தில்லை
2012 DA 14 விண்கல், எந்த வித ஆபத்தையும் விளைவிக்காமல், நள்ளிரவில் பூமிக்கு மிக அருகே கடந்து சென்றது.
விண்வெளி ஆய்வாளர்கள் மற்றும் விஞ்ஞானிகளால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு, விஞ்ஞானிகளால் கணிக்கப்பட்டதை விட பூமிக்கு மிக அருகில் விண்கல் கடந்து சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியா மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளில் உள்ள விண்வெளி ஆய்வு மையங்கள் மூலம், இதன் பாதை தொடர்ந்து கண்காணிக்கப்பட்டது.
இந்தோனேஷியாவின் சுமத்ரா தீவின் மேல் பகுதியில் கடந்து சென்ற இந்த விண்கல், இந்திய நேரப்படி நள்ளிரவு ஒரு மணிக்கு சில நிமிடங்கள் முன்பாக, பூமியில் இருந்து 17 ஆயிரத்து 200 மைல் உயரத்தில்,
பூமியைக் கடந்து சென்றது தெரியவந்துள்ளது. பூமிக்கும், செயற்கைக் கோள்களுக்கும் இடையே உள்ள பகுதியில், கடந்து சென்ற இந்த விண்கல்லில் இருந்து, சில மாதிரிகளும் எடுக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
ரஷ்யாவின் செல்யாபின்ஸ்க் பகுதியில் நேற்று விழுந்த எரிகல்லுக்கும், 2012 DA 14 விண்கல்லுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!