வசந்த பஞ்சமியை முன்னிட்டு திரிவேணி சங்கமத்தில் லட்சக்கணக்கானோர் புனித நீராடால்
அலகாபாத்: வசந்த பஞ்சமியை முன்னிட்டு உத்திரப்பிரதேச மாநிலம் அலகாபாத் திரிவேணி சங்கமத்தில் மகா கும்பமேளாவின் முக்கிய தினம் என்பதால் அகோரிகள் மற்றும் சாதுக்கள் திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.
பிரசித்தி பெற்ற அலகாபாத் கும்பமேளாவின் முக்கிய நாளாக கருதப்படும் வசந்த் பஞ்சமி நாளான இன்று புனித நீராட மக்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்த வண்ணம் உள்ளனர். மகா கும்பமேளா கடந்த ஜனவரி மாதம் 14 ஆம் தேதி துவங்கி நடந்து வருகிறது. வரும் மார்ச் மாதம் 10 ஆம் தேதி வரை 55 நாட்கள் நடைபெற உள்ளது. இந்த திரிவேணி சங்கமத்தில் புனித நீராட வட மாநிலங்களிலிருந்து லட்சக்கணக்கான மக்கள் நாள் தோறும் வந்து புனித நீராடி வருகின்றனர்.
இந்த கும்பமேளாவின் மிக முக்கிய தினமாக கருதப்படும் வசந்த் பஞ்சமி நாளான இன்று புனித நீராட லட்சக்கணக்கான மக்கள் திரிவேணி சங்கமத்தில் குவிந்த வண்ணம் இருகின்றனர். இன்று காலை 3.30 மணிக்கு துவங்கிய புனித நீராளால் நிகழ்ச்சியில் காலை 7.30 மணியளவில் அகாடாக்கள் கலந்து கொண்டு புனித நீராடினர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!