உயிரைப் பறித்த கோகோ கோலா… நியூசிலாந்து பெண்ணின் சோகம்
கோகோகோலாவை அளவிற்கு அதிகமாக குடித்து உயிரை பறிகொடுத்துள்ளார் நியூசிலாந்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர்.
நியூசிலாந்தின் தெற்கு பகுதியில் உள்ள இவ்னர்கார்கில் பகுதியை சேர்ந்தவர் நடாஷா ஹாரிஸ் (30). இவர் கடந்த சில ஆண்டுகளாக தினமும் 10 லிட்டர் அளவிற்கு கோக கோலா குடித்து வந்துள்ளார். இதனால் அவருக்கு முதலில் இருதய நோய் தாக்கியது. இதன்பின்னர் மரணத்தை தழுவியுள்ளார் நடாஷா.
அந்தப் பெண்ணின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் இன்று வெளியாகியுள்ளன. அதில் உடலில் அளவுக்கதிகமாக கோக கோலா இருந்ததால் அவரது வளர்சிதை மாற்றத்தில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அவரது இதயம் பலவீனமாகி இறுதியில் அவரது மரணத்திற்கு காரணமாகி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோக கோலா, பெப்ஸி உள்ளிட்ட குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் உள்ளது என பல்வேறு ஆய்வு முடிவுகள் எச்சரிக்கின்றன. இருந்தாலும் கோகோ கோலா, பெப்ஸி போன்ற குளிர்பானங்கள் குடிப்பதைத்தான் இன்றைய இளம் தலைமுறையினர் விரும்புகின்றனர். இந்த பழக்கம் இளம்பெண்ணின் உயிரையே பறித்துள்ளது என்பதுதான் சோகம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!