Sunday, September 16, 2012

வீடு புகுந்து நகை திருடிய சிங்க வால் குரங்கு


வீடு புகுந்து நகை திருடிய சிங்க வால் குரங்கு


 

சிங்கவால் குரங்கு, அரிய வகை விலங்கு பட்டியலில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் காணப்படுகிறது. கோவை மாவட்டம், வால்பாறை அடுத்த புதுத்தோட்டம் எஸ்டேட் பகுதியில் அதிகளவில் உள்ளன. ஆனால் இங்குள்ள தோட்ட தொழிலாளர் குடியிருப்பில் புகுந்து சிங்கவால் குரங்குகள் அட்டகாசம் செய்து வருகின்றன. இங்கு வசிக்கும் செல்வி என்பவரது வீட்டில் சிங்கவால் குரங்கு புகுந்தது. சமையலறையை சூறையாடிய குரங்கு அரிசி டப்பாவில் இருந்த சிறிய நகை டப்பாவை தூக்கிக் கொண்டு வீட்டின் ஓடுகள் மீது ஏறிவிட்டது. குரங்கை விரட்டவே அது நகை டப்பாவுடன் மரங்களில் தாவிதாவி ஓடி வனத்திற்குள் புகுந்துவிட்டது. டப்பாவில் வைக்கப்பட்டிருந்த 1 பவுன் செயின், கால் பவுன் மோதிரம் ஆகியவற்றை ஓட்டின் மீது இருந்து மீட்டனர். முக்கால் பவுன் கம்மல் தேடியும் கிடைக்கவில்லை.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!