‘ஐ-போன் 5’ விற்பனை: நாம் கனவிலும் நினைக்க இல்லை என்கிறது ஆப்பிள்!
தலைகால் தெரியாத மகிழ்ச்சியில் மிதக்கிறது ஆப்பிள் நிறுவனம். ‘புதிய ஐ-போன் 5’ விற்பனை எப்படியுள்ளது என்ற அறிவிப்பை பெருமையுடன் வெளியிட்டிருக்கிறது அந்த நிறுவனம்.
கடந்த வெள்ளிக்கிழமை ஆன்லைன் ‘ப்ரீ ஆர்டர்’ திறக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே ஸ்டாக் தீர்ந்துவிட்டது என்பது பழைய செய்தி அதை ஒப்புக்கொண்டுள்ள ஆப்பிள், நேற்று மாலை விற்பனை விபரத்தை வெளியிட்டது.
அதன்படி, முதல் 24 மணி நேரத்தில் எத்தனை ‘ஐ-போன் 5’ விற்பனையாகின தெரியுமா? 2 மில்லியன்!
ஆப்பிள் நிறுவன வரலாற்றிலேயே இதுவரை ‘ஐ-போன் 4’ விற்பனைதான் ரிக்கார்டாக இருந்தது. இப்போது, ‘ஐ-போன் 5’ விற்பனை அதைவிட இரு மடங்கு அதிகம்!
ஆப்பிள் நிறுவன செய்தித் தொடர்பாளர், “‘ஐ-போன் 5’ விற்பனை ஓகோ என்று இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். ஆனால், இந்தளவுக்கு விண்ணை முட்டும் விற்பனையை நாம் கனவிலும் நினைத்ததில்லை. இதற்கு நாம் தயாராகவும் இல்லை. முதல் தினத்தில் ஆன்லைனில் ஆர்டர் செய்த அனேகருக்குகூட, அக்டோபர் மாதம்தான் போன்களை டிலிவரி செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!