சீனர்களுக்கான அரசின் புதிய சுகாதார பழக்க வழக்க அறிவுறுத்தல்கள் !!! நமக்கு எப்பவோ ?
வெளிநாடுகளுக்கு செல்லும் சீன சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் மூக்கை குடைவது உள்ளிட்ட அநாகரீகமான செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அந்நாட்டு அரசு அறிவுறுத்தியுள்ளது. சீன சுற்றுலாப் பயணிகளை கவர பல நாடுகள் விருப்பமாக உள்ளன. ஆனால் அவர்களின் அநாகரீகமான செயல்கள் பிற நாட்டவர்களை முகம் சுளிக்க வைக்கின்றன.
இந்நிலையில் வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்லும் சீனர்கள் பொது இடங்களில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று அந்நாட்டு அரசு 64 பக்கங்கள் கொண்ட விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.
மூக்கை நோண்டுவது
சுற்றுலா செல்லும்போது பொது இடங்களில் மூக்கை நோண்டி சீனாவின் பெயரைக் கெடுக்கக் கூடாது என்று சீனர்களுக்கு அரசு தெரிவித்துள்ளது.
சிறுநீர் கழித்தல்
குளங்களில் சிறுநீர் கழிப்பது, விமானங்களில் வழங்கப்படும் லைஃப் ஜாக்கெட்டுகளை திருடுவது ஆகியவற்றை செய்யக் கூடாது என்று சீனர்கள் வலியுறுத்தப்பட்டுள்ளனர்.
கழிவறைகள்
பொது கழிவறைகளை பயன்படுத்தும்போது வெகுநேரம் அங்கேயே இருந்து விடக் கூடாது என்றும், கழிவறையை அசுத்தம் செய்துவிட்டு வரக் கூடாது என்றும் சீன மக்களக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
நூடுல்ஸ்
சூப் குடிக்கையில் பாத்திரத்தை கையில் எடுத்து அப்படியே குடிக்கக் கூடாது என்றும், நூடுல்ஸ் சாப்பிடுகையில் சர் புர் என்று சத்தம் போடக் கூடாது என்றும் சீன அரசு தெரிவித்துள்ளது.
பல்லை குடைவது
பொது இடங்களில் பல்லை குடைவதும் கூடாது என்று சீன சுற்றுலாப் பயணிகளுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
ஒரே புகார்
சீனாவில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் பொது இடங்களில் மிகவும் அநாகரீகமாக நடந்து கொள்கிறார்கள் என்று பல்வேறு நாடுகள் புகார் தெரிவித்தன. இதையடுத்து தான் சீன அரசு இந்த புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!