இ-மெயிலை கண்டுபிடித்தவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்?
இ-மெயிலை கண்டுபிடித்தவர் (உருவாக்கியவர்) ஒரு தமிழர் (V.A. Shiva Ayyadurai)
இன்றைக்கு இமெயில் என்ற வசதி இல்லாத வாழ்க்கையை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை அல்லவா…
அந்த வசதியை அறிமுகப்படுத்தியவர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனைப் பேருக்குத் தெரிந்திருக்கும்? ஆம்! அதுதான் உண்மை. இன்று உலகையே ஒருவலைக்குள் இணைத்த பெருமைக்குரிய இமெயி ல் வசதியை நம்ம தமிழர் ஒருவர்தான் கண்டு பிடித்தார். அதற்கான காப்புரிமையையும் பெற்றுள்ளார்.
அவர் பெயர் வி ஏ சிவா அய்யாத்துரை. இன்றைக்கு முப்பது வயது நிரம்பிய இவர், தனது 14வது வயதிலேயே இந்த மின்னஞ்சல் தொழில் நுட்பத்தைக் கண்டுபிடித்து அறிமுகப்படுத்திவிட்டார்.
“The
efforts to belittle the innovation of a 14-year-old child should lead
to reflection on the larger story of how power is gained, maintained,
and expanded, and the need to encourage, not undermine, the capacities
for creative inquiry that are widely shared and could flourish, if
recognized and given the support they deserve.“
As MIT's Institute Professor Noam Chomsky reflected: இமெயில் என்ற பெயரையும், இன்பாக்ஸ், அவுட்பாக்ஸ், ட்ராஃப்ட்ஸ், மெமோ உள்ளிட்ட (Inbox, Outbox, Drafts, the Memo (“To:”, “From: ”, “Subject:”, “Bcc:”, “Cc:”, “Date:”, “Body:”), and processes such as Forwarding, Broadcasting, Attachments, Registered Mail, and others.) அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய தகவல் பரிமாற்றத்தை இவர்தான் கண்டுபிடித்தார்.
ஆனால், குடியேற்ற சிறுபான்மை இனத்தவர் என்ற காரணத்தினாலோ என்னவோ , அவருக்கு முதலில் அந்த அங்கீகாரத்தை கொடுக்கவில்லை அமெரிக்கா. அதனால் இமெயில் காப்புரிமைக்கு பலரும் சொந்தம் கொண்டாடினர்.
நான்கு ஆண்டுகள் கழித்து அமெரிக்க அரசாங்கம், 1982 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் நாள் முறையாக வி.ஏ.சிவா அய்யாதுரையின் புதிய கண்டுபிடிப்பான ‘இ-மெயில்’ ஐ அங்கீகரித்து காப்பி ரைட் வழங்கியது. இவரது கண்டுபிடிப்புக்கு இவ்வாண்டோடு சரியாக முப்பது ஆண்டுகள் ஆகின்றன.
இதைக் கொண்டாடும் வகையில் ஒரு அர்த்தமுள்ள போட்டியை அறிவித்துள்ளார் டாக்டர் சிவா அய்யாத்துரை. நியூ ஜெர்ஸி மாகாணம் நேவார்க் நகரில் ‘இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ்’ என்ற புதிய நிறுவனத்தை தொடங்கியுள்ள அவர், அதன் சார்பில் இந்தப் போட்டியை அறிவித்துள்ளா ர்.
நேவார்க் நகர உயர் நிலைப்பள்ளி மாணவர்களின் புதிய கண்டு பிடிப்புகளுக்கு ஊக்கம் தரும் வகையில் ஒரு லட்சம் டாலர்கள் பரிசுத் தொகை வழங்கப்போவதாக அறிவித்துள்ளார்.
மாணவனாக இருந்தபோது தனது கண்டுபிடிப்புக்கு அங்கீகாரம் கிடைக்காமல் பல்வேறு சோதனைகளுக்குள்ளான தன்னைப்போல், ஏனைய மாணவர்களுக்கு அந்த சோகம் நேரக்கூடாது என்பதற்காகவும், மாணவர்களின் கண்டுபிடிப்புகள் புதிய தொழில்களை தொடங்கும் வகையிலும் இன்னோவேஷன்ஸ் கார்ப்ஸ் உறுதுணையாக இருக்கும் என்றார்.
இன்று அமெரிக்காவில் பல தொழில்களை நடத்தி வரும் டாக்டர் சிவா அய்யாதுரை, அமெரிக்க பிரபல பல்கலைக்கழகமான எம். ஐ.டி யின் விரிவுரையாளராகவும் பணிபுரிகிறார்.
சமீபத்தில் நடந்த வடஅமெரிக்க தமிழர் பேரவை (ஃபெட்னா) வெள்ளி விழா மாநாட்டில் அவர் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்த க்கது. அவரது ‘இமெயில்’ பயணத்தை http://www.inventorofe mail.com/ தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!