3000 ஆண்டுகளுக்கு முன்னர் மண்ணில் புதையுண்ட நகரம் ஈராக்கில் கண்டுபிடிப்பு
சுமார் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய நகரம் ஒன்றை வடக்கு ஈரானில் தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டு பிடித்துள்ளனர். வடக்கு ஈராக்கின் குர்திஸ்தான் மாகாணத்தில் புதையுண்டு கிடந்த நகரம் ஒன்றை தொல்லியல் துறை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இது சுமார் 3000 ஆண்டுகள் பழமையான நகரம் என ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
அந்தக்கால கட்டத்தில் தான் மக்கள் பயிர் வேளாண்மை செய்ய ஆரம்பித்ததாகவும் ஆராய்ச்சியாளார்கள் தெரிவித்துள்ளனர்.
ஆய்வு....
சப் ஆற்றின் வடக்கு கரை பகுதியில் உள்ள கிராமம் சட்டு காலா. அங்கு ஒரு பாறையின் அடியில் தொல்லியல் துறை ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
அபு மன்னர்....
அப்போது, தரைமட்டத்தில் இருந்து சுமார் 32 அடி ஆழத்தில் புதையுண்டு கிடந்த இடு என்று அழைக்கப்பட்ட சுமார் 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான நகரம் அவர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.
பயிர் வேளாண்மை....
இந்த நகரில் மக்கள் வாழ்ந்த காலகட்டத்தில்தான் மத்திய கிழக்கு நாடுகளில் பயிர் வேளாண்மை தோன்றியதாகவும், அசாரியன் பேரரசின் கீழ் சுமார் 2900 மற்றும் 3300 ஆண்டுகளுக்கு இடையில் இந்த நகரில் மக்கள் வசித்திருக்க கூடும் எனவும் தொல்லியல் துறையினர் கருத்து தெரிவித்துள்ளனர்.
அரண்மனை....
இந்த முன்னர் அபு நகரில், எடிமா என்பவரின் மகனான பவுரியின் அரண்மனை இருந்ததற்கான ஆதாரமும் கிடைத்துள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!