நாசா விஞ்ஞானிகள் பெருமிதம்
குறையின்றி செயல்படுகிறது கியூரியாசிட்டி விண்கலன்
செவ்வாய் கிரகத்தில் கியூரியாசிட்டி எந்த குறைபாடும் இல்லாமல் சிறப்பாக செயல்படுகிறது என்று நாசா விஞ்ஞானிகள் பெருமிதம் தெரிவித்தனர். செவ்வாய் கிரகத்தில் மனிதன் உயிர் வாழ முடியுமா?, ஏற்கெனவே அங்கு உயிர்கள் இருந்துள்ளனவா? என்று ஆராய்வதற்காக அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம், கடந்த மாதம் 6ம் தேதி கியூரியாசிட்டி விண்கலனை செவ்வாய் கிரகத்தில் தரையிறக்கியது. ஒரு மாதத்தில் அது 109 மீட்டர் நகர்ந்து சென்று ஆய்வு பணிகளை மேற்கோண்டது. பல்வேறு புகைப்படங்களை எடுத்து பூமிக்கு அனுப்பியது. தற்போது அதை நகர்த்தாமல் ஒரு இடத்தில் நிறுத்தியுள்ள விஞ்ஞானிகள், அதில் உள்ள ஒவ்வொரு கருவியையும் சோதனை செய்து வருகின்றனர். கியூரியாசிட்டி செல்லும் திசையை மாற்ற உதவும் கம்ப்யூட்டரை ஆப் செய்து மீண்டும் இயக்கியுள்ளனர். இதுவரை மேற்கொள்ளப்பட்ட அனைத்து சோதனைகளும் சரியாக முடிந்துள்ளன. அடுத்ததாக, செவ்வாயில் உள்ள பாறை, மண்ணை ஆய்வு செய்வதற்காக கியூரியாசிட்டியில் உள்ள 7 அடி நீள இயந்திர கையை இயக்குதல், மண் மாதிரிகளை பரிசோதனை செய்யும் அமைப்பை சோதித்தல் ஆகிய பணிகளில் தற்போது நாசா விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். இன்னும் சில நாட்களில் 3 விதமான நிலப்பரப்பை கொண்ட கிளென்எல்க் என்ற பகுதிக்கு கியூரியாசிட்டியை நகர்த்திச் சென்று அங்கு மண் மாதிரிகளை ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!