உலகிற்கு ஒரு உறுதியான செய்தி : ஒபாமா
அமெரிக்காவின் காப்டிக் நிறுவனம் தயாரித்துள்ள திரைப்படத்தில் இஸ்லாமை பற்றி மோசமாக விமர்சித்துள்ளதால், உலகம் முழுவதும் பெருமளவு ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன.
இது குறித்து ஜனாதிபதி ஒபாமா கூறுகையில், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் இந்த நேரத்தில் உலகத்துக்கு ஒரு உறுதியான செய்தியை சொல்கிறோம்.
எங்கள் நாட்டு மக்களை தாக்கியவர்கள் நீதியின் பிடியிலிருந்து தப்ப முடியாது. அமெரிக்காவை அசைக்க நினைக்கும் எவரையும் அனுமதிக்க மாட்டோம்.
அமெரிக்க மக்களை யாரும் தாக்குவதை ஒருபோதும் பொறுத்து கொள்ளவே மாட்டோம். நாங்கள் மத சுதந்திரத்தை மதிக்கிறோம். இஸ்லாம் உள்பட எந்த மதத்தையும் யாரும் துவேஷிப்பதை நிராகரிக்கிறோம்.
அதே சமயம் வன்முறைக்கு எந்தவிதத்திலும் நியாயம் கற்பிக்க முடியாது. எங்கள் தூதரகங்களை தாக்கியவர்களுக்கு மன்னிப்பு கிடையாது என்று தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!