தென்கொரியா சூறாவளி: கற்களும் பறந்த அதிசயத்தை அச்சத்துடன் பார்த்த மக்கள்!
தென் கொரியாவின் கரையோரப் பகுதிகளை நேற்று (திங்கட்கிழமை) காலை சூறாவளி தாக்கியதில் பலந்த சேதம் ஏற்பட்டுள்ளது. வேகமான காற்று மற்றும் கடும் மழை காரணமாக பலர் வீடிழந்தனர். காற்றின் வேகத்துக்கு கற்களும் பறந்த அதிசயத்தை அச்சத்துடன் பார்த்தார்கள் தென்கொரிய மக்கள்.
சுறாவளி சன்பா காரணமாக சில இடங்களில் காற்று மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் வீசியது. பல நகரங்களில் மின்தடை ஏற்பட்டது. 30,800 வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. 330 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
சூறாவளி தென் கொரியாவை தாக்குவதற்கு முன், ஜப்பானின் சில பகுதிகளையும் தாக்கியது.
வீடிழந்தவர்கள், மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வேண்டும் என்பதை ஊகித்து, Hyundai Marine & Fire Insurance, Samsung Fire & Marine Insurance ஆகிய நிறுவனங்களின் பங்குகள் பங்குச் சந்தையில் முறையே 3.4, 3.5 சதவீத சரிவை சந்தித்தன. தென்கொரிய டெலிகாம் பங்குகளும் 3.3 சதவீத சரிவைச் சந்தித்தது.
தென்கொரியாவின் கடலோர நகரங்கள் சிலவற்றில் நேற்று காலை எடுக்கப்பட்ட 7 போட்டோக்களை தந்திருக்கிறோம். நிலைமை எப்படி இருந்தது என்பதை பாருங்கள்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!