Saturday, September 22, 2012

புதிய ஐ-போனை வாங்கிய முதலாவது நபர்


புதிய ஐ-போனை வாங்கிய முதலாவது நபர், அதை வாங்கிய விதத்தை பாருங்கள்!




ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் 5, நேற்று (வெள்ளிக்கிழமை) உலக நகரங்கள் பலவற்றில் ஒரே தினத்தில் விற்பனைக்கு வந்தது. முதல் தினமே போனை வாங்க வேண்டும் என்று கடை வாயிலிலேயே சில தினங்களுக்கு முன் இடம் பிடித்து, கியூவில் படுத்து தூங்கியவர்கள் பற்றி செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
எனவே அதை விட்டு விடலாம்.

குறிப்பிட்ட ஒரு ஸ்டோரில், விற்பனை தொடங்கிய நேரத்தில், காட்சி எப்படி இருந்தது என்பதை சில போட்டோக்களில் பார்க்கலாம். ஸ்டோர் திறந்த நேரத்தில் இருந்து, கியூவில் நின்ற முதலாவது நபர், ஐபோனை வாங்கிக் கொண்டு வெளியே வரும் காட்சியை இந்த 9 போட்டோக்களில் பாருங்கள்.

இங்கு நாம் தேர்ந்தெடுத்தது, லண்டன், Covent Garden-ல் உள்ள ஆப்பிள் ஸ்டோரை. அந்த ஒரு ஸ்டோரில் என்ன நடந்தது என்பதைப் பார்க்க வாருங்கள்…

இதோ முதலாவது போட்டோவில், ஆப்பிள் ஸ்டோரின் ஊழியர்கள் கடையை திறப்பதற்கு வருகிறார்கள். வெளியே நீண்ட கியூவில் காத்திருப்பவர்களை நோக்கி கையசைத்துவிட்டு, கடையை திறக்கப் போகிறார்கள்.


கூட்டத்தை பாருங்கள். இவர்களில் பெரும்பாலானோர் நேற்று சுமார் 4 மணி நேரம் காத்திருந்த பின்னரே கடைக்குள் செல்ல முடிந்தது. காரணம், இவர்கள் கியூவில் இல்லை.


செல்வதற்காக உள்ள கியூ. இதன் தொடக்கத்தில் உள்ள பலர், இங்கேயே வரிசையில் காத்திருந்து தூங்கி எழுந்து, தயாராக நிற்கிறார்கள்.


வாசல் திறந்துவிட்டது. கியூவில் நின்றிருந்தவர்களில் முதல் செல்ல உள்ளே செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள்..


முதல் செட்டில் கடைக்கு உள்ளே வந்தவர்களை கடை ஊழியர்கள் ஹை-ஃபைவ் கொடுத்து உற்சாகப்படுத்தி வரவேற்கிறார்கள்.


சேல்ஸ் செய்பவர்கள் பரபரப்பான விற்பனைக்கு தயாராகிறார்கள். இதோ… முதலாவது கஸ்டமர் வரப் போகிறார்.


விற்பவர்களுக்கு பின்னால், ஐ-போன் 5 பெட்டிகள் தயாராக அடுக்கப்பட்டு காத்திருக்கின்றன. கடகடவென்று எடுத்துக் கொடுக்க வேண்டியதுதான்.


இந்த ஸ்டோரின் முதலாவது ஐபோனை வாங்கியவர் அதை ஆனந்தத்துடன் காண்பிக்கிறார். கென்ட் பகுதியில் வசிக்கும் இவரது பெயர், ரயன் வில்லியம்ஸ். மொத்தம் ஐந்து  ஐபோன்களை இவர் வாங்கினார்.


ஆப்பின் ஸ்டோர் ஊழியர்கள் அனைவரும் வந்து அவரை பாராட்டி, உற்சாகப்படுத்த டான்ஸ் ஆடுகிறார்கள்.

விற்பனை செய்த இவர்களே இந்த ஆட்டம் போட்டால், வாங்கிய ரயன் வில்லியம்ஸ் எந்த ஆட்டம் போடுவார்? இதோ நம்ம டி.ராஜேந்தர் பாணியில் போடுகிறார் ஒரு குத்தாட்டம்!


No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!