ஜப்பானில் பயங்கர சூறாவளி
ஜப்பானில் பயங்கர சூறாவளி புயல் வீசுவதால் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளன.
ஜப்பானின் ஒகினாவா மாகாணத்தில் சூறாவளி புயல் மையம் கொண்டுள்ளது.
மணிக்கு 252 கி.மீ வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசுவதால் ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்துள்ளன.
ஒகினாவா தலைநகர் நாகாவிலிருந்து புறப்படும் அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
மேம்பாலத்தில் ரயில் மற்றும் வாகனங்கள் செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மின்கம்பங்கள் சாய்ந்து ஒயர்கள் துண்டிக்கப்பட்டதால், இந்த நகரம் இருளில் மூழ்கியுள்ளது.
சூறாவளி காற்றுக்குத் தாக்குப் பிடிக்க முடியாமல் முதியவர் ஒருவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளார். இதுவரை நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.
காற்றின் வேகம் அதிகரிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
இதனால் நாகா நகரில் சாலைகள் வெறிச்சோடிக் காணப்படுகின்றன. கடலில் 13 மீற்றர் உயரத்துக்கு அலைகள் எழும்பி ஆர்ப்பரிக்கின்றன. இதனால் கப்பல்கள் துறைமுகத்திலேயே நிறுத்தப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!