ஸ்கிரீன்ல கிஸ் பண்ணியாச்சா.. கங்கிராட்ஸ், உங்க கல்யாணம் முடிஞ்சு போச்சு, போய்ட்டு வாங்க!
காலம் கெட்டுப் போச்சு... இது பல்லுப் போன பாட்டி மார்களும், தாத்தாக்களும் ஒரு காலத்தில் நம்மைப் பார்த்து சொன்ன வார்த்தை. ஆனால் இன்று காலம் மாறிப் போய் விட்டது. இல்லாவிட்டால் கம்ப்யூட்டர் ஸ்கிரீன் மூலம் ஒரு கல்யாணத்தையே முடிப்பார்களா... அப்படியாகி விட்டது கதை.. தொடர்ந்து படியுங்கள்.
ஒரு சின்ன லேப்டாப். இந்தப் பக்கம் மணப் பெண். மறுமனையில் ஏதோ ஒரு மூலையில் மாப்பிள்ளை. இருவருக்கும் நடுவே வெப்காம். இதுதான் இருவரையும் ஒருவரை ஒருவர் முகம் பார்க்க உதவுகிறது. இருவரும் ஆன்லைனில் மணம் முடிக்கிறார்கள். கம்ப்யூட்டர் மானிட்டரில் முத்தம் பதித்துக்கொள்கிறார்கள். கல்யாணம் முடிந்தது.
இப்படித்தான் கடந்த வாரம் பூனம் செளத்ரியின் திருமணம் நடந்தது. இன்னும் அந்தத் திருமணத்தின் திரில்லிலிருந்து மீளவில்லையாம் பூனம். உலகின் இரு வேறு மூலைகளிலிருந்தபடி பூனமும், அவரது கணவரும் திருமணம் செய்துள்ளனர்.
பூனம் ஒரு அமெரிக்க குடியுரிமை பெற்ற இந்தியப் பெண். அவரது கணவர் பெயர் தன்வீர் அகமது. இவர் வங்கதேசத்தில் இருக்கிறார். இருவரும் காதலித்னர். திருமணத்தை ஆன்லைனில் நடத்த முடிவானது.
இதையடுத்து ஜாக்சன் ஹைட்ஸ் என்ற இடத்தில் உள்ள மசூதியில் பூனமும் அவரது உறவினர்களும், நண்பர்களும் திரண்டனர். அதேபோல ஷரியா நீதிபதி ஒருவரது முன்னிலையில், தன்வீர் அகமது வங்கதேசத்தில் தயாராக இருந்தார். ஸ்கைப் மூலம் இருவரது திருமணத்தை நடத்தினர். முழுக்க முழுக்க இன்டர்நெட்டை நம்பி இந்தத் திருமணம் நடந்தது. இந்த்த திருமணம் தற்போது சட்டப்படி பதிவும் செய்யப்பட்டு விட்டதாம்.
திருமணத்திற்குப் பின்னர் கம்ப்யூட்டர் ஸ்கிரீனில் தெரிந்த பூனத்தின் வெட்கப் புன்னகை கலந்த முகத்தில் தன்வீர் முத்தமிட்டாராம். இதைப் பார்த்து கூட இருந்தவர்கள் குதூகலித்து சிரித்ததால் பூனத்திற்கு மேலும் வெட்கம் ஏறிப் போய் முகமே சிவந்து விட்டதாம்.
ஆன்லைனில் நடந்த இந்தத் திருமணம் ஆச்சரியத்தைக் கொடுக்கலாம். ஆனால் பல காலத்திற்கு முன்பே அதாவது பிரான்ஸ் மன்னராக இருந்த 16ம் லூயிக்கும், மேரி ஆன்டான்ய்ட்டுக்கும் இடையேயும் கூட இப்படித்தான் திருமணம் நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரியாவில் நடந்தது இந்தத் திருமணம். அப்போது லூயி அங்கு இல்லை. அவர் இல்லாமலேயே திருமண சடங்குளை நடத்தினர். பின்னர் மேரியை பிரான்ஸுக்கு கப்பல் மூலம் அனுப்பி வைத்தனர்.
தனது திருமணம் குறித்து தன்வீர் கூறுகையில்,எனது லேப்டாப்தான் இப்போதைக்கு எனது மனைவி என்று கூறிச் சிரித்தார்.
நிஜம்தான், இங்கு பலருக்கு கம்ப்யூட்டரும், லேப்டாப்பும்தானே மனைவியாகவும், கணவர்களாகவும் உள்ளனர்...!
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!