Wednesday, March 6, 2013

ஜேர்மனின் புதிய விமான நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல் திணறல்

ஜேர்மனின் புதிய விமான நிலைய மின் விளக்குகளை அணைக்க முடியாமல் திணறல்


பல கோடி ரூபாய் செலவில் ஜேர்மனியில் அமைக்கப்பட்டு வரும் விமான நிலையத்தின் மின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஜேர்மனி தலைநகர் பெர்லினில் டெகெல் மற்றும் ஸ்கோனெபெல்டு என்ற இரண்டு விமான நிலையங்கள் செயல்படுகின்றன.

பெருகி வரும் பயணிகளின் எண்ணிக்கையை சமாளிக்க அதி நவீன வசதிகளுடன் "பெர்" என்ற புதிய விமான நிலையம் அமைக்கும் பணி நடக்கிறது. இந்த ஆண்டில் இவ்விமான நிலையம் திறக்க திட்டமிடப்பட்டது. ஆனால் கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டதால் எதிர்வரும் 2017ம் ஆண்டில் தான் இவ்விமான நிலையம் தயாராகும்.

இதற்கிடையில் இவ்விமான நிலையத்தை உருவாக்க முதலில் 14 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது.

தாமதத்தின் காரணமாக செலவு இருமடங்காகும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்விமான நிலையத்தில் உள்ள மின் விளக்குகள் எரிவதற்கு மட்டும் ஒரு நாளைக்கு 3 லட்சம் ரூபாய் செலவாகிறது.

இந்நிலையில் இந்த விளக்குகளை அணைக்க முடியவில்லை என்றும் அந்த அளவுக்கு தொழில் நுட்பத்தில் நாம் முன்னேறவில்லை என விமான நிலைய கட்டுமான அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பல ஆயிரம் கோடியில் உருவாக்கப்படும் விமான நிலையத்தின் விளக்குகளை அணைக்க முடியவில்லை என சொல்வது "கேலிக்குரியது" என ஜேர்மன் மக்கள் தெரிவித்துள்ளனர்.





No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!