Wednesday, March 6, 2013

திருமணத்தில் அழகான மாப்பிள்ளையாக ஜொலிக்க வேண்டுமா?


திருமணத்தில் அழகான மாப்பிள்ளையாக ஜொலிக்க வேண்டுமா?


திருமணம் என்று சொன்னாலே ஒருவித மாற்றம் முகத்தில் தெரியும். குறிப்பாக பெண்களுக்கு நன்கு தெரியும். எனவே பெண்கள் திருமணத்தன்று இன்னும் அழகாக காணப்பட அழகு நிலையங்களுக்கு சென்று, நிறைய பராமரிப்புகளை மேற்கொள்வார்கள். இத்தகைய அழகு பெண்களுக்கு மட்டும் தான் உள்ளது, ஆண்களுக்கு இல்லையா என்ன? ஆகவே திருமணத்தன்று பெண்களை விட அழகாக காணப்படுவதற்கு, ஒருசில பராமரிப்புகள் என்று சொல்வதை விட, செயல்களை தினமும் செய்து வந்தால், நிச்சயம் அழகாக ஜொலிக்க முடியும்.

பொதுவாக அழகு என்று சொன்னால், பெண்கள் சொல்லப்படுவதற்கு காரணம், பெண்கள் அழகிற்கு அதிகம் முக்கியத்துவம் கொடுப்பதே ஆகும். எனவே தான், அவர்கள் திருமணத்தன்று மிகவும் அழகாக காணப்படுகின்றனர். ஆனால் ஆண்கள் இவற்றிற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் இருப்பதால், சில ஆண்கள் பெண்களை விட அதிக அளவில் முகப்பருக்களால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பருக்கள் திருமணத்தன்று இருந்தால் நன்றாக இருக்குமா? இருக்காது அல்லவா! எனவே திருமணத்தன்று முகத்தில் எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருப்பதற்கு, ஆண்கள் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று பார்ப்போமா!!!


ஃபேஸ் வாஷ் 

முகத்திற்கு சோப்பை பயன்படுத்தி கழுவுவதை விட, ஏதேனும் ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவ வேண்டும். ஏனெனில் சோப்பானது சருமத்தை அதிக வறட்சியடையச் செய்யும். குறிப்பாக இரவில் படுக்கும் முன், தினமும் முகத்தை ஃபேஸ் வாஷ் பயன்படுத்தி கழுவினால், முகத்தில் பருக்கள் வருவதைத் தவிர்க்கலாம்.


எலுமிச்சை ஜூஸ் 

பெரும்பாலும், மலச்சிக்கல் பிரச்சனை இருந்தால், முகத்தில் பருக்கள் வருவதோடு, உடைந்து பரவவும் ஆரம்பிக்கும். எனவே ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாற்றை பிழிந்து, அதில் தேனை சேர்த்து, கலந்து தினமும் காலையில் குடித்து வந்தால், குடலியக்கப் பிரச்சனை சரியாகிவிடும்.


தண்ணீர் 

தினமும் 4 லிட்டர் தண்ணீரை குடிக்க வேண்டும். உடலில் டாக்ஸின்கள் அதிகமாக இருந்தாலும், அவை பருக்களை உண்டாக்கும். எனவே தண்ணீரை குடிப்பதால், உடலில் உள்ள டாக்ஸின்கள் வெளியேறி விடுவதோடு, உடலும் நன்கு பொலிவோடு காணப்படும்.


ஷேவிங் 

தினமும் ஷேவிங் செய்யாமல் இருந்தால், தாடியின் அளவானது அதிகரிப்பதோடு, முகத்தில் பிம்பிள்களும் வந்துவிடும். எனவே திருமணத்தன்று, முகத்தில் பிம்பிள் வராமல் இருப்பதற்கு, திருமணத்திற்கு ஒருமாதம் முன்பிருந்து, ஷேவிங் செய்ய வேண்டும். இல்லையெனில் ட்ரிம் செய்யலாம்.


நைட் க்ரீம் 

இரவில் படுக்கும் முன், தினமும் சருமத்திற்கு மாய்ச்சுரைசரை தடவி படுக்க வேண்டும். இவ்வாறு செய்வதால், சருமம் மென்மையாகும். மேலும் சருமத்தில் வறட்சி இருக்காது. அதுமட்டுமின்றி, இதனை தொடர்ந்து செய்யும் போது, இதன் பலனை எப்போதும் பெறலாம்.


சன் ஸ்கிரீன் லோசன் 

ஆண்கள் அடிக்கடி வெளியே செல்ல வேண்டி இருப்பதால், சூரியக்கதிர்களின் தாக்கத்தில் இருந்து சருமத்தை பாதுகாப்பதற்கு, சன் ஸ்கிரீன் லோசனை தடவிக் கொண்டு செல்ல வேண்டும். இதனால் சருமத்தின் நிறம் மாறுவதை தடுக்கலாம்.


காபி 

காப்ஃபைன் அதிகம் உள்ள பொருளான காபி மற்றும் இதர பானங்களை குடித்தால், முகத்தில் பருக்கள் மற்றும் மற்ற சரும பிரச்சனைகள் வரும். எனவே திருமணத்தன்று நன்கு அழகாக காணப்படுவதற்கு, கொஞ்ச நாட்கள் அளவுக்கு அதிகமாக காபி குடிப்பதை தவிர்க்க வேண்டும்.


பீர் 

ஆல்கஹாலில் ஒன்றான பீர் குடித்தால், சருமம் பொலிவோடு இருக்கும். அதுவும் அளவாக குடித்தால், நன்மைகளை பெறலாம். இல்லையெனில் தொப்பை வந்துவிடுவதோடு, உடலுக்கும் உயிருக்கும் கேடு தான் விளையும்.


வியர்வை 

உடலில் இருந்து வியர்வை வெளியேறுவது மிகவும் நல்லது. ஏனெனில் வியர்க்கும் போது, உடலில் இருந்து, டாக்ஸின்கள் வெளியேறிவிடும். எனவே திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், ஜிம் சென்று உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக கொண்டால், உடல் அழகாவதோடு, முகமும் நன்கு புத்துணர்ச்சியுடன்


ஃபேஸ் பேக் 

பெண்கள் மட்டும் தான் ஃபேஸ் பேக் போட வேண்டுமென்பதில்லை. ஆண்களும் வாரத்திற்கு ஒரு முறை, வீட்டில் உள்ள மஞ்சள், வெள்ளரிக்காய், பால், கடலைமாவு போன்றவற்றை பயன்படுத்தி, ஃபேஸ் பேக் போட்டால், முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி, முகத்தை அழகாக வைத்துக் கொள்ளலாம்.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!