நம்பிக்கை மோசடி புகார் மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,000 கோடி அபராதம்
ஒப்பந்தப்படி வாடிக்கையாளர்களுக்கு உரிய வாய்ப்புகளை தராமல் நம்பிக்கை மோசடி செய்ததாக பிரபல கம்ப்யூட்டர் நிறுவனமான மைக்ரோசாப்ட்டுக்கு ஐரோப்பிய யூனியன் 561 மில்லியன் யூரோ(ரூ.4,020 கோடி) அபராதம் விதித்துள்ளது.உலகின் முன்னணி கம்ப்யூட்டர் சாப்ட்வேர் நிறுவனம் மைக்ரோசாப்ட் நிறுவனம். பில்கேட்ஸ் தலைமையிலான இந்நிறுவனம், விண்டோஸ் பெயரில் புதுப்புது சாப்ட்வேர்களை வெளியிட்டு வருகிறது. இந்த சாப்ட்வேர் தொடர்பாக ஐரோப்பிய யூனியன் கூட்டமைப்பிடம் மைக்ரோசாப்ட் நிறுவனம் 2009ம் ஆண்டில் ஒப்பந்தம் செய்து கொண்டது.இதன்படி, இன்டர்நெட் பார்க்கும் வாடிக்கையாளர்களுக்காக, விண்டோஸ்&7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தில், பல்வேறு பிரவுசர் வாய்ப்புகளை தொடர்ந்து 5 ஆண்டுகளுக்கு தர வேண்டும் என்பது விதிகளில் ஒன்று. ஆனால், 2011 மே முதல் ஜூலை 2012ம் ஆண்டு இடைப்பட்ட காலத்தில் விற்கப்பட்ட விண்டோஸ்&7ல், மைக்ரோசாப்ட் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசர் மட்டுமே தரப்பட்டுள்ளது.அதாவது, இந்த காலத்தில் விண்டோஸ்&7 ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை வாங்கிய ஒன்றரை கோடி பேரை மைக்ரோசாப்ட் நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இதன் மூலம் பல கோடிகளை அந்நிறுவனம் ஏமாற்றியுள்ளது. இதுதொடர்பான புகாரை ஐரோப்பிய யூனியன் கமிஷன் விசாரணை செய்தது. ஒப்பந்தத்தை மீறி நம்பிக்கை மோசடியில் ஈடுபட்டது நிரூபிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ரூ.4,020 கோடி அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டுள்ளது.இதற்கு முன்பு இரு முறை மைக்ரோசாப்ட் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் அபராதம் விதித்துள்ளது.தற்போது விதிக்கப்பட்டுள்ள அபராதத்துடன் சேர்த்து, அந்நிறுவனத்துக்கு விதிக்கப்பட்ட மொத்த அபராதத் தொகை ரூ.15,840 கோடியாக உயர்ந்துள்ளது.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!