Wednesday, March 6, 2013

ஆண்டிற்கு 10 கோடி சுறாக்கள் வேட்டை: கனடிய ஆய்வு

ஆண்டிற்கு 10 கோடி சுறாக்கள் வேட்டை: கனடிய ஆய்வு



ஒவ்வொரு ஆண்டும் 10 கோடி சுறா மீன்கள் வேட்டையாடப்படுவதாக கனடிய ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.
கனடாவில் உள்ள டல் ஹவுசி பல்கலைக்கழக பேராசிரியர் போரிஸ் வார்ம் மற்றும் புளோரிடா பல்கலைக் கழகத்தின் நிர்வாக இயக்குனர் மைக் ஹீதாஸ் ஆகியோர் சுறா மீன்கள் வேட்டையாடப்படுவது குறித்த ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளனர்.

ஆய்வறிக்கையில் கூறியுள்ளதாவது: சுறா மீன்கள் கடந்த 40 கோடி ஆண்டுகளாக கடலில் வாழ்கின்றன. இறைச்சிக்காக வேட்டையாடப்படுவதால் இவற்றின் எண்ணிக்கை தற்போது வெகுவாக குறைந்து வருகிறது.

இவற்றின் துடுப்புகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. கடந்த 2000ம் ஆண்டில் 10 கோடி சுறா மீன்கள் கொல்லப்பட்டன. கடந்த 2010ம் ஆண்டில் கொல்லப்பட்ட சுறா மீன்களின் எண்ணிக்கை ஒன்பது கோடி.

இவை அதிக அளவில் வேட்டையாடப்படுவதால் கடல் தாவரங்கள் குறைந்து விடும். இதனால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உண்டாகும் என ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!