Wednesday, March 6, 2013

வடக்கு, கிழக்கில் விவசாய நடவடிக்கைகளுக்காக இந்தியர்களுக்கு வீசா

வடக்கு, கிழக்கில் விவசாய நடவடிக்கைகளுக்காக இந்தியர்களுக்கு வீசா


வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இந்தியர்களுக்கு வீசா வழங்கப்படும் என்று குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
அதன் கட்டுப்பாட்டாளர் சூலாநந்த பெரேரா இதனை ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்

எனினும் விவசாய துறை அமைச்சு இது தொடர்பில் கோரிக்கை விடுத்தால் மாத்திரமே இந்த வீசாக்கள் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் விவசாயத்தில் ஈடுபட போதுமான ஆளனி வெற்றிடங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

இதனைத் தொடர்ந்தே அமைச்சர் மகிந்த யாப்பா அபேவர்தன இந்த திட்டத்தை அறிவித்தார்.

இதற்கு ஆரம்பத்தில் எதிர்ப்புகள் காணப்பட்ட போதும், தற்போது வரவேற்கப்படுகிறது.

ஏற்கனவே குறித்த பிரதேசங்களில் பயணிகள் வீசாவுடன் வந்து விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் இந்தியர்கள் தொடர்ச்சியாக கைது செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!