பலத்த புயல் மழையில் உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவர் சரிந்தது
உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவரின் ஒரு பகுதி, பலத்த மழையில் சரிந்து விட்டது. சீனாவில் கடந்த மாதம் பலத்த மழை பெய்ததில், தலைநகர் பீஜிங் கடுமையாக பாதிக்கப்பட்டது. மழை வெள்ளத்தில் 79 பேர் பலியாயினர். தொடர்ந்து பல பகுதிகளில் மழை பெய்து வருகிறது. அணைகளில் நீர்மட்டம் அபாய கட்டத்தை தாண்டி வழிந்தோடுகிறது. பல பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை ஸ்தம்பித்துள்ளது. இந்நிலையில், ஹெபேய் மாகாணம் வழியாக செல்லும் சீன பெருஞ்சுவர், பலத்த மழை காரணமாக சரிந்து விழுந்துள்ளது. உலக அதிசயங்களில் ஒன்றான சீன பெருஞ்சுவரில் உள்ள கற்களை பல கிராம மக்கள் வீடு கட்ட பெயர்த்து எடுத்து சென்றனர். இதனால் ஏற்கனவே பெருஞ்சுவர் பாதிக்கப்பட்டது. இந்நிலையில் வரலாற்று சிறப்பு மிக்க பெருஞ்சுவர் மழையால் சேதம் அடைந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சேதம் அடைந்த பகுதியில் உடனடியாக சீரமைப்பு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!