நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு நடந்த இருதய அறுவை சிகிச்சை வெற்றி
நிலவில் முதன்முதலாக கால் பதித்த அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங்குக்கு இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்தது.
அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையத்தில் விஞ்ஞானியாக பணியாற்றிய ஆம்ஸ்ட்ராங், 1969ம் ஆண்டு சந்திரனுக்கு சென்றார்.
இக்குழுவில் 3 பேர் இருந்தாலும் முதன் முதலில் ஆம்ஸ்ட்ராங்கே சந்திரனில் கால் பதித்தார்.
பின்னர் சில வருடங்களாக நாசாவில் பணியாற்றிய இவர், தற்போது ஓய்வில் உள்ளார். சமீபகாலமாக இருதயத்தில் அடைப்பு ஏற்பட்டிருந்த இவரது உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து இவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளபட்டு தற்போது உடல் நலம் முன்னேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆம்ஸ்ட்ராங்கை அவரது மனைவி கரோல் கவனித்து வருகின்றார்.
இது குறித்து நாசா நிர்வாகி சார்லஸ் போல்டன், ஆம்ஸ்ட்ராங் அமெரிக்காவின் ஹீரோ. சிரமமான காலத்திலும் கூட மிகவும் துடிப்புடன் செயற்பட்டவர் என்று தெரிவித்தார்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!