Thursday, August 9, 2012

ரஷ்ய ராக்கெட் நடுவானில் தோல்வி

ரஷ்ய ராக்கெட் நடுவானில் தோல்வி





ரஷ்யா நேற்று விண்ணில் செலுத்திய புரோட்டான் எம் ராக்கெட் புவி வட்டப்பாதையில் செயற்கைக்கோள்களை நிலைநிறுத்த இயலாமல் நடுவானில் தோல்வியடைந்தது.
ரஷ்ய விஞ்ஞானிகள் உருவாக்கிய புரோட்டான்-எம் ராக்கெட், கஜகஸ்தானில் உள்ள பைகானூர் ஏவுதளத்தில் இருந்து நேற்று அதிகாலை விண்ணில் செலுத்தப்பட்டது.

அதில் இந்தோனேசியாவின் டெல்காம்-3 செயற்கைக்கோளும், ரஷ்யாவின் எக்ஸ்பிரஸ் எம்.டி.-2 செயற்கைக்கோளும் வைக்கப்பட்டிருந்தன.




எனினும் ராக்கெட்டில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக அதனால் இந்த 2 செயற்கைக் கோள்களையும் புவி வட்டப்பாதையில் நிலைநிறுத்த இயலவில்லை.

இந்த ராக்கெட் பயணம் தோல்வியில் முடிந்ததாகவும், அதில் வைத்து அனுப்பப்பட்ட செயற்கைக்கோள்கள் காணாமல் போனதாகக் கருதப்படுவதாகவும் ரஷ்ய விண்வெளி ஆய்வு அமைப்பான ராஸ்காஸ்மாஸ் தெரிவித்துள்ளது.



Fore More Information



No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!