தைவான் நாட்டில் 16 நிமிடத்தில் நாற்று நட்டு விவசாயிகள் சாதனை
தைவான் நாட்டில் 5.2 ஏக்கர் நிலத்தில் 16 நிமிடத்தில் நாற்றுக்களை நட்டு உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. தைவான் நாட்டின் வடக்குப் பகுதியில் உள்ள டோயூயான் மாவட்டத்தில் 1,215 பேர் ஒன்று சேர்ந்து, நாற்று நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
5.2 ஏக்கர் நிலத்தில் இவர்கள், 16 நிமிடம் 20 வினாடிகளில் நாற்றுகளை நட்டு உலக சாதனை படைத்தனர். இந்த நிகழ்ச்சியில், 91 வயதான நபர் முதல் 16 வயது பெண் வரையுள்ள விவசாயிகள் பங்கேற்றனர்.
தாய்லாந்தில் கடந்த 2010ம் ஆண்டு 900 பேர், 1.6 ஹெக்டேர் நிலத்தில், 30 நிமிடத்தில் நாற்று நட்டது உலக சாதனையாக இருந்தது. தற்போது இந்த சாதனையை தைவான் நாட்டுக்காரர்கள் முறியடித்துள்ளனர்.
No comments:
Post a Comment
உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.
புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!