Friday, August 10, 2012

செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலத்தில் இலங்கை விஞ்ஞானியின் பங்களிப்பு



செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கிய ரோவர் விண்கலத்தில் இலங்கை விஞ்ஞானியின் பங்களிப்பு



 



அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிலையமான நாசாவால் செவ்வாய்க் கிரகத்துக்கு வெற்றிகரமாக அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது கியூரியாசிட்டி ரோவர் விண்கலம்.

இதன் மூலம் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வெற்றியை அமெரிக்கா நிலை நாட்டி உள்ளது.

அமெரிக்காவின் இந்த வெற்றியில் இலங்கை விஞ்ஞானி ஒருவருக்கும் மிக காத்திரமான பங்கு உள்ளது.

நாசாவில் சிரேஷ்ட ஆய்வுகள் விஞ்ஞானியாக பணியாற்றி வருகின்றார் கலாநிதி சரத் குணபால.

ரோவர் விண்கலத்தில் ஆறு பிரதான உபகரணங்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இவற்றுள் முக்கியமான ஒன்று டீ. எல். எப் என்கிற லேசர் உபகரணம்.

செவ்வாய்க் கிரகத்தில் மீதேன் வாயு காணப்படுகின்றதா? என்பதை ஆராய இவ்வுபகரணம் வடிவமைக்கப்பட்டு உள்ளது. செவ்வாயில் கடந்த காலங்களில் உயிரினங்கள் வாழ்ந்தனவா? என்பதை மீதேன் வாயு தொடர்பான ஆய்வுகள் மூலம் உறுதிப்படுத்த வாய்ப்புக்கள் உள்ளன.

இந்நிலையில் இவ்வுபகரணத்தை இலங்கை விஞ்ஞானி கலாநிதி சரத் குணபால தலைமையிலான நிபுணர்கள் குழுதான் வடிவமைத்துக் கொடுத்து உள்ளது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!