Friday, August 10, 2012

செவ்வாய் கிரகத்தின் கலர் புகைப்படத்தை அனுப்பியது கியூரியாசிட்டி


 செவ்வாய் கிரகத்தின் கலர் புகைப்படத்தை அனுப்பியது கியூரியாசிட்டி


 



 


செவ்வாய் கிரகத்தில் தரையிறங்கியுள்ள அமெரிக்காவின் கியூரியாசிட்டி விண்கலம் அக்கிரகத்தின் கலர் புகைப்படங்களை எடுத்து அனுப்பத் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

அமெரிக்காவின் நாசாவின் ஏற்பாடான கியூரியாசிட்டி விண்கலம் செவ்வாய் கிரக ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றது.

கடந்த 5ம் திகதி செவ்வாயில் தரையிறங்கிய கியூரியாசிட்டி கருப்பு- வெள்ளை புகைப்படங்களையே அனுப்பியிருந்தது.

இந்நிலையில் தற்போது அனுப்பியிருப்பது கலர் படமொன்றை அனுப்பியுள்ளது. இது குறித்து விஞ்ஞானிகள், இந்த கலர் படமும் இரண்டரை நிமிட வீடியோ படமாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்த வீடியோவை பார்க்கும் போது செவ்வாய் கிரகத்தில் தரைதளம் மிகவும் இளகி உள்ளதாகத் தெரிகிறது என்றும் விஞ்ஞானிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

செவ்வாய் கிரகத்தில் தடம் பதித்துள்ள கியூரியாசிட்டி விண்கலம் இன்னும் இரண்டு வருடங்கள் செவ்வாய் கிரகத்தில் தனது ஆய்வைத் தொடரும் என்று தெரிகிறது. இந்த ஆய்வின் முடிவில் செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ முடியுமா என்பது தெரிந்துவிடும் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.





2 comments:

  1. அறிவியலின் நூறாவது பதிவு

    ReplyDelete
  2. ஆம், நன்றி வாசகரே அறிவியலுடன் இணைத்திருப்பதற்கு

    ReplyDelete

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!