Thursday, August 9, 2012

விற்பனையில் புதிய சாதனைகளை படைக்கும் சாம்சங் காலக்ஸி எஸ் 3 போன்கள்


விற்பனையில் புதிய சாதனைகளை படைக்கும் சாம்சங் காலக்ஸி எஸ் 3 போன்கள்


 



மற்ற ஸ்மார்ட் போன்களை காட்டிலும் சாம்சங் காலக்ஸி எஸ் 3 போன்கள் விற்பனையில் சாதனை படைத்து வருகின்றன.

சாம்சங் நிறுவனத்திற்கு எதிரான ஆப்பிள் நிறுவனத்தின் வழக்கு, ஆப்பிள் நிறுவனத்தின் அடுத்த புதிய ஐபோன் வர இருப்பது குறித்த தகவல் என எத்தனை இடைஞ்சல்கள் இருந்தாலும், சாம்சங் காலக்ஸி எஸ் 3 தன் விற்பனையில் புதிய இலக்குகளை எட்டியுள்ளது.

நாளொன்றுக்கு ஏறத்தாழ ஒரு லட்சத்து 90 ஆயிரம் என்ற எண்ணிக்கையில் காலக்ஸி எஸ் 3 விற்பனையாகிறது.

மே மாதம் 29ஆம் திகதி அறிமுகமாகி, பன்னாட்டளவில் இரண்டே மாதங்களில், ஒரு கோடி என்ற இலக்கினை எளிதாக அடைந்து தொடர்ந்து இதன் விற்பனை உயர்ந்து வருகிறது.

அடுத்த ஆப்பிள் ஐ போன் வர குறைந்தது ஒரு மாதம் ஆகும் என்பதால், இதன் விற்பனை பல புதிய இலக்குகளை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எண்ணிக்கையை அடைய சாம்சங் கேலக்ஸி எஸ் 2 ஸ்மார்ட் போனுக்கு ஐந்து மாதங்கள் ஆயின என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!