Thursday, January 3, 2013

சமையலறையில் சிக்கிய குட்டியை மீட்க வீட்டை உடைத்த யானைகள்

சமையலறையில் சிக்கிய குட்டியை மீட்க வீட்டை உடைத்த யானைகள்



வீட்டின் சமையலறையில் நுழைந்த யானை குட்டியை மீட்க 2 யானைகள் வீட்டின் சுவரை  உடைத்ததால்  அப்பகுதி மக்கள் பீதியடைந்துள்ளனர்.நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே அத்திகுன்னா கன்னடையன்பாடி தனியார் தோட்டத்தில் வசிப்பவர் சிங்கிரி (52). இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டார். இந்நிலையில் நேற்று அந்த பகுதிக்கு 2 யானைகளுடன் ஒரு குட்டியும் வந்தது. சிங்கிரி வீட்டின் சமையலறை பகுதியை யானைகள் உடைத்தன. அங்குள்ள அரிசி, பருப்பு மற்றும உணவை சாப்பிடுவதற்காக குட்டியானை உள்ளே புகுந்தது. பிறகு அதனால் வெளியே வர முடியவில்லை. சமையல் அறைக்குள் அங்கும் இங்கும் ஓடியபடி  பிளிறியது. இதை கண்ட மற்ற யானைகள் வீட்டின் சுவற்றை இடித்து தள்ளி உள்ளே சென்றன. வீட்டில் சமையறையில் இருந்த அனைத்து பொருட் களையும் சூறையாடின. அருகே இருந்த மேலும் ஒரு வீட்டையும் சேதப்படுத்தியன. இப்பகுதியில் யானைகள் நடமாட்டம் தற்போது அதிகமாக உள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். யானைகள் குடியிருப்பு பகுதிக்குள் நுழைவதை வனத்துறையினர் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்கள் மேலான கருத்துகளை இங்கு பதியுங்கள். பதிவின் கருவுக்குத் தொடர்பில்லாதவை, தனிநபர் தாக்குதல், அநாகரிகப் பின்னூட்டங்கள் பதியப்படாது.

புரிதலுடன் கூடிய உங்களது ஒத்துழைப்புக்கு நன்றி!